21 வயதில் 124 ரன்கள்.. ஒரே போட்டியில் பல சாதனைகளை உடைத்த யஷஷ்வி ஜெய்ஸ்வால்! – என்னென்ன சாதனைகள்? – பட்டியல் உள்ளே!

0
969

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இளம் வீரர் ஜெய்ஷ்வால் 124 ரன்கள் அடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த போட்டியில் அவர் படைத்த சாதனை விவரங்களை பின்வருமாறு காண்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் துவக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஓபனிங் செய்து 62 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து 124 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இறுதியாக மும்பை அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை தழுவி இருந்தாலும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடியதால் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்த போட்டியில் அவர் படைத்த சாதனை விவரங்களை பின்வருமாறு காண்போம்

இந்திய அணிக்கு விளையடாதபோது, இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச ஐபிஎல் ஸ்கொர்

- Advertisement -

முதலாவதாக 124 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணிக்கு விளையாடாத இந்திய வீரர் ஐபிஎல் வரலாற்றில் அடித்த அதிபட்ச ஸ்கொர் என்கிற சாதனையை படைத்தார். அந்த பட்டியலை கீழே பார்க்கலாம்.

  1. யஷஷ்வி ஜெய்ஸ்வால் – 124 ரன்கள்
  2. பால் வல்தாட்டி – 120* ரன்கள்
  3. மனிஷ் பாண்டே – 114* ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அடிக்கப்பட்ட தனிமனித அதிகபட்ச ஸ்கொர்

124 ரன்கள் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு பேட்ஸ்மேன் ஒரு இன்னிங்சில் அடுத்த அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்.

  1. யஷஷ்வி ஜெய்ஸ்வால் – 124 ரன்கள்
  2. ஜோஸ் பட்லர் – 124 ரன்கள்
  3. சஞ்சு சாம்சன் – 119 ரன்கள்
  4. ஜோஸ் பட்லர் – 116 ரன்கள்

ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர்கள் அதிகபட்ச ஸ்கொர்

124 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.

  1. கேஎல் ராகுல் – 132* ரன்கள்
  2. ரிஷப் பண்ட் – 128* ரன்கள்
  3. முரளி விஜய் – 127 ரன்கள்
  4. யஷஷ்வி ஜெய்ஸ்வால் – 124 ரன்கள்
  5. விரேந்திர சேவாக் – 122 ரன்கள்

ஐபிஎல் வரலாற்றில் சதமடித்த இளம் வீரர்கள் பட்டியல்

யஷஷ்வி ஜெய்ஸ்வால் 21 வயதில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பட்டியலை கீழே காண்போம்

  1. 19 வயது, 253 நாட்கள் – மனிஷ் பாண்டே
  2. 20 வயது, 218 நாட்கள் – ரிஷப் பந்த்
  3. 20 வயது, 289 நாட்கள் – தேவ்தத் படிக்கல்
  4. 21 வயது, 123 நாட்கள் – யஷஷ்வி ஜெய்ஸ்வால்
  5. 22 வயது, 151 நாட்கள் – சஞ்சு சாம்சன்