ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025.. ப்ளே ஆப்பில் ஆட முடியாத.. 10 நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் – முழுமையான லிஸ்ட்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இடைநிறுத்தப்பட்டு நடைபெறுகின்ற காரணத்தினால் பிளே ஆப் சுற்றில் 10 நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அதிகரித்த பதட்டத்தின் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் தொடரின் நடுவே இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற மே 17ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்க இருக்கிறது. இதில் பத்து வெளிநாட்டு வீரர்கள் பிளே ஆப் சுற்றில் ஆட முடியாத நிலை காணப்படுகிறது.

முதல் ஐந்து வீரர்கள்

ரியான் ரிக்கல்டன்: மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் துவக்க ஆட்டக்காரரான சவுத் ஆப்பிரிக்கா வீரர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகள் விளையாடுவதால் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்.

மார்கோ யான்சன் : பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சு தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் ஜோஸ் பட்லர், ஆர்சிபி ஜேக்கப் பெத்தேல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வில் ஜேக்ஸ் மூவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதால் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் விளையாட மாட்டார்கள்.

இரண்டாவது ஐந்து வீரர்கள்

தென்னாப்பிரிக்க வீரர்களான ரபாடா, கார்பின் போஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லுங்கி நிகிடி என்ன நான்கு வீரர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட இருக்கிறார்கள். இதே போல ரபாடாவுக்கு ஊக்க மருந்து பிரச்சனையால் என்ஒசி கிடைக்கவில்லை என்றால் ஜெரால்டு கோட்சி விளையாட வேண்டி இருப்பதால் அவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். இந்த பத்து வீரர்கள் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் பங்கேற்க வாய்ப்பு இல்லாதவர்கள்.

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற விராட் ரோகித்.. அதிரடியாக சம்பளம் கட் ஆகிறதா.. மரியாதை கிடைக்குமா? – பிசிசிஐ விளக்கம்

இதே போல ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் முழுதாகவே ஐபிஎல் தொடருக்கு திரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நிறைய புதுமுக வெளிநாட்டு வீரர்கள் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Ipl 2025

Recent Posts