“திரும்ப அகமதாபாத் மைதானத்தில் பைனல்ல விளையாடுவோம்.. இந்த முறை தப்பாது!” – டெம்பா பவுமா பேச்சு!

0
1328
Bavuma

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி தனது லீக் சுற்றின் கடைசி போட்டியில் விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கை துரத்துவதில் பிரச்சனை இருந்து வந்தது. இந்தப் போட்டியிலும் ஐந்து விக்கெட்டுகளை இழந்து அப்படியான ஒரு நிலை உருவானது.

ஆனாலும் வான்டர் டேசன் மற்றும் பெலுவாயோ இருவரும் நின்று விளையாடி 48 ஓவரில் அணியை வெல்ல வைத்தார்கள். இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும் அரை இறுதியில் கொல்கத்தா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது.

போட்டிக்குப் பிறகு பேசிய தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறும் பொழுது “என் கால் வலிக்குது ஆனா அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. நான் வெளியேறி இருக்கவே நினைத்தேன். வெற்றி பெறுவது ஒரு பழக்கம் அதை தொடர்ந்து எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

- Advertisement -

நாங்கள் தற்பொழுது இரண்டாவது பேட்டிங் செய்து போட்டியை வென்று இருக்கிறோம். இது எங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வெற்றிக்கு காரணமாக வான்டர் டேசன் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன் அவரைச் சுற்றி விளையாடினார்கள்.

நிச்சயமாக நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல, முழுமையாக ரசிகர்கள் நிரம்பி இருக்கும் இந்த பெரிய மைதானத்தில் மீண்டும் வந்து விளையாட விரும்புகிறோம். இப்படி ஒரு கூட்டத்தின் முன்னால் விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாட வேண்டியது இருக்கிறது அதற்கு மனதை தயார் செய்வோம்!” என்று கூறியிருக்கிறார்!

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. அடுத்து பதினைந்தாம் தேதி மும்பை மைதானத்தில் அரையிறுதியில் நியூசிலாந்தை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!