இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி துவங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் 11-ம் தேதியில் முடிவடைகிறது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில், 5 போட்டிகள் கொண்ட இரண்டு பெரிய அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர், மொத்த அட்டவணையிலுமே மிகப்பெரிய டெஸ்ட் தொடராக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு மிகவும் கடினமான பவுன்ஸ் ஆகும் ஆடுகளம் கொடுக்கப்பட்டது.
அந்த குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. அந்த ஆடுகளும் குறித்து இந்திய அணியின் தரப்பில் இருந்து எந்த விதமான புகார்களும் கூறப்படவில்லை.
போட்டி முடிவுக்குப் பின் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” நாளை எங்கள் நாட்டில் முதல் பந்தில் இருந்து திரும்பும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டால், அது குறித்து யாரும் எதுவும் சொல்லக்கூடாது. அதுவரையில் நாங்கள் இதுகுறித்து எதுவும் சொல்ல மாட்டோம்” என்பதாக கூறியிருந்தார்.
ஆசியாவை தாண்டி வெளியில் இருந்து வரும் கிரிக்கெட் நாடுகளுக்கு இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிக மிக கடினமான ஒரு நாடு. தட்பவெப்ப நிலை மற்றும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில், உலக தரமான பேட்ஸ்மேன்கள் கூட சாதாரண பேட்ஸ்மேன்கள் போல வெளியேறுவார்கள். ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சமமாக இருக்கும்.
இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்தியா சுழற் பகுதிக்கு சாதகமான ஆடுகளையே தயாரிக்கும். ஆனால் இது இந்திய அணிக்கு ஆபத்தாக போய் முடியும் என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நன்றாக சுழலும் ஆடுகளங்களை இந்தியா கேட்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் எங்களை ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாம் என்று நினைப்பார்கள்.
அவர்கள் நன்றாக சுழலும் ஆடுகளங்களை கேட்டு வாங்கினால், அது எங்களுக்கு ஒரு பெரிய லாட்டரி ஆக மாறி, எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களையும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். பாஸ்பால் அதன் அதிரடி ஆட்டத்தை விளையாடும். எங்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கருதுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.