லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் ஆசியா லயன்ஸ், வேர்ல்டு ஜெயிட்ன்ஸ், இந்தியன் மகாராஜாஸ் ஆகிய மூன்று அணிகளை கொண்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் வீரர்களை கொண்டு ஒரு டி20 தொடர் நடத்தப்பட்டது.
இந்த லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடர்புக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கமிஷனராக நியமிக்கப்பட்டு இருந்தார். தற்பொழுது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தத் தொடர் இரண்டாம் முறையாக நடைபெற இருக்கிறது இதற்கும் ரவி சாஸ்திரியே கமிஷனராக தொடர்கிறார்.
இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் உலக அணியோடு இந்திய அணி மோதும் ஒரு போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது ஓய்வு பெற்ற வீரர்களை கொண்டு நடத்தப்படுவது. இதில் இந்திய அணிக்கு சவுரவ் கங்குலியும், உலக அணிக்கு இங்கிலாந்தின் இயான் மார்கன் கேப்டனாக இருக்கிறார்கள்.
இந்த தொடர் குறித்து இதன் கமிஷனரான ரவிசாஸ்திரி கூறும்பொழுது ” நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பெருமையான தருணம் ஆகும். லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டை நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்கு அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறோம். இந்த தகவலை பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்திய மகாராஜா அணி:
சவுரவ் கங்குலி கேப்டன், வீரேந்திர சேவாக், முகமத் கைப், யூசுப் பதான், இர்பான் பதான், பத்ரிநாத், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர் பி சிங், ஜோகிந்தர் சர்மா.
அறிவிக்கப்பட்டுள்ள ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணி:
இயான் மோர்கன் கேப்டன், லென்டில் சிம்மன்ஸ், கிப்ஸ், ஜாக் காலிஸ், ஜெயசூர்யா, மேட் பிரையர், நாதன் மெக்கல்லம், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகட்சா, மோர்தாஸா, அஸ்கர் ஆப்கான், மிட்சல் ஜான்சன், பிரட் லீ, கெவின் ஓ பிரையன், தினேஷ் ராம்தின்.






