மற்றுமொரு வீரரை நாட்டிற்கு அனுப்பிய ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்; இது 3வது வீரர்! என்ன நடக்கிறது அந்த அணியில்?

0
679

ஆஸி., அணியின் இடதுகை ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆஸ்டன் அகர், ஆஸ்திரலிய உள்ளூர் போட்டிகளில் விளையாட நாடு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவிற்கு வந்து முதற்கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரலிய அணி விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரண்டிலும் படுதோல்வி அடைந்து தொடரில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இரண்டிலும் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். குறைந்தபட்சம் ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். இப்போது இந்திய அணி இருக்கும் ஃபார்மிற்கு, 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் அளவிற்கு பலமாக இருக்கிறது.

இப்படியொரு மோசமான நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியில் இருந்து வீரர்கள் ஒன்றன்பின் மற்றொருவராக காயம் காரணமாகவும் சொந்த காரணங்களுக்காகவும் தங்களது நாட்டிற்கு திரும்புகின்றனர்.

- Advertisement -

முன்னதாக, வார்னர் மற்றும் ஹேசல்வுட் இருவரும் காயம் காரணமாக நாடு திரும்பினர். இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பினார். இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருப்பாரா? மாட்டாரா? என்கிற சந்தேகங்கள் தற்போது வரை நிலவி வருகிறது.

இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்காக நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளார் இடதுகை ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆஸ்டன் அகர்.

இடது ஸ்பின்னரான இவர், இந்த சீரியசில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை பிளேயிங் லெவனில் கூட ஆஸி., அணி எடுக்கவில்லை. தனது பந்துவீச்சில் முழுமையான நம்பிக்கை இல்லை என்று அணி நிர்வாகத்திடம் இவர் கூறியதாக சில வதந்திகள் பரவுகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாமல் இருந்தது.

இதற்கிடையில் ஆஸ்டன் அகர் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பது வதந்திகளை உண்மை என்று நம்ப வைக்கும் விதமாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஸ்டார்ட் போன்ற சில முன்னணி வீரர்கள் விளையாட முடியாமல் இருக்கின்றனர். மேலும் சில வீரர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். தற்போது ஆஸ்திரேலியா அணியில் சரியாக பிளேயிங் லெவனில் இடம்பெறும் அளவிற்கு மட்டுமே வீரர்கள் இருப்பதாக தெரிகிறது.