பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர் ஐபிஎல் தொடரில் அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த அந்த அணியை பற்றி தற்போது பார்ப்போம்.
ஓபனிங் வீரர்கள்
ஓபனிங் வீரர் என்று சொன்னாலே ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் கிறிஸ் கெயில் பெயர் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் பல மாயாஜாலங்கள் செய்திருக்கிறார். மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மாவுக்கு புதிதாக எந்தவித அறிவும் தேவை இல்லை. இவர்கள் இருவரையும் ஓப்பனிங் வீரர்களாக சோயப் அக்தர் தேர்வு செய்துள்ளார்.
மிடில் ஆர்டர் வீரர்கள்
நம்பர் 3 இடத்தில் விராட் கோலியை அக்தர் தேர்வு செய்துள்ளார். தற்பொழுது மோசமான பார்மில் அவர் இருந்தாலும் அது எப்படிப்பட்ட வீரர் என்பது நமக்கு தெரியும். நம்பர் 3 இடத்தில் விராட் கோலி விளையாடுவதே சரியாக இருக்கும்.
அதற்கு அடுத்து பெங்களூரு அணியில் பல போட்டிகளில் அந்த அணிக்கு நம்பிக்கை தூணாக விளங்கிய ஏபி டிவில்லியர்ஸ் நான்காவது இடத்திலும், மும்பை அணியில் அதிரடியாக பினிஷராக விளையாடி வரும் கீரோன் பொலார்டை5வது இடத்திலும் அக்தர் தேர்வு செய்துள்ளார்.
கேப்டனாக மகேந்திர சிங் தோனி
ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியை அக்தர் தேர்வு செய்துள்ளார். மகேந்திர சிங் தோனி கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக விளையாடக் கூடிய ஆற்றல் பெற்றவர். பவர் ஹிட்டிங் திறமை கொண்ட அவர் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்று அக்தர் கூறியுள்ளார்.
ஆல்ரவுண்டர் வீரர்கள்
ஆல்ரவுண்டர் வீரர்களாக ஆன்ட்ரூ ரசல் மற்றும் ரஷித் கான் ஆகியோரை அக்தர் தேர்வு செய்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள்
ஸ்பின் பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங்கையும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக பிரட் லீ மற்றும் லசித் மலிங்கா ஆகியோரை அக்தர் தேர்வு செய்துள்ளார்.
சோயப் அக்தர் தேர்வு செய்துள்ள அணி :
கிறிஸ் கெயில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கீரோன் பொல்லார்ட்,மகேந்திர சிங் தோனி(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அன்ட்ரூ ரசல், ரஷித் கான், ஹர்பஜன்சிங் பிரெட் லீ மற்றும் லசித் மலிங்கா.