விராட் கோலியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன்சியை கற்றுக் கொண்டேன் – ரோகித் சர்மா வெளிப்படையான பேச்சு!

0
1670
Rohitsharma

இரண்டு நாட்களுக்கு முன்பு நாக்பூரில் தொடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது!

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளை வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான நிலை இருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக இந்த தொடரை அணுக இது கூடுதல் அழுத்தத்தை தரக்கூடியது. ஆனால் அவர் கேப்டனாக இந்த போட்டியில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார்.

வெற்றிக்குப் பிறகு மனம் திறந்து அவர் நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து பேசிய அவர் ” நான் ஒரு வீரராக விராட் கோலியின் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பொழுது, விக்கெட் கிடைக்காத நேரங்களில், விக்கட்டுக்காக பந்துவீச்சாளர்கள் எப்படியான அழுத்தத்தை தொடர்ந்து தருகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தேன். நான் இந்த கேப்டன்சி விஷயத்தை விராட் கோலி கேப்டனாக இருந்த பொழுது கற்றுக் கொண்டேன். அதைத்தான் நான் இப்பொழுது செய்ய முயற்சிக்கிறேன். அந்த அழுத்தத்தை தொடர்ந்து எதிரணி மீது கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தேவையில்லாமல் உற்சாகம் அடையக் கூடாது என்று கூறி இருக்கிறார்!

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பேசிய அவர் ” அஸ்வின் இந்தியாவில் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அவர் 100 டெஸ்ட் போட்டிகளை நெருங்கி வருகிறார். மேலும் அவர் இதில் அதிக டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் விளையாடியவராக இருப்பார் என்று நம்புகிறேன். அவரால் பந்து வீச்சில் கேரம், ஸ்லைடர், டாப் ஸ்பின் என வெரைட்டியாக வீச முடியும். அவர் அபார திறமையானவர்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -