சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரே ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள்

0
413

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடந்து முடிந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் டேவிட் வார்னர் சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவறவிட்டார். 99 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆன காரணத்தினால் 19வது ஒருநாள் சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் நேற்று அவர் தவற விட்டார்.

டேவிட் வார்னர் மட்டுமின்றி சில முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவற விட்டு இருக்கிறார்கள். அந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

- Advertisement -

ஜாஃப்ரி பாய்காட் – மூன்று முறை

1974ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் முறையாக இவர் 99 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் அதே ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இந்த மூன்றாவது முறை 1980ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவற விட்டார்.

சச்சின் டெண்டுல்கர் – மூன்று முறை

- Advertisement -

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் 90களில் 17 முறை அதிகபட்சமாக தனது விக்கெட்டை இழந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் இன்று வரை முதலிடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 2007ஆம் ஆண்டில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மிஸ்பா உல் ஹக் – மூன்று முறை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை 2 முறை இவர் தவறவிட்டார். பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டில் மூன்றாவது முறை இவர் தொண்ணூற்று ஒன்பது ரன்னில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

ரிச்சி ரிச்சர்ட்சன் – மூன்று முறை

மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் முதல் முறையாக 1985ஆம் ஆண்டு 99*ரன் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் 1989இல் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் 1991இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் 99 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

டீன் ஜோன்ஸ் – இரண்டு முறை

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் 1985இல் இலங்கை அணிக்கு எதிராகவும் 1989இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் தொண்ணூற்றி ஒன்பது ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

சனத் ஜெயசூரியா – இரண்டு முறை

2001 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.2003இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக 99 ரன்னில் ஆட்டமிழந்து குறிப்பிடத்தக்கது.

விரேந்திர ஷேவாக் – இரண்டு முறை

2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு மாத இடைவெளியில் இரண்டு முறை, ஒரு ரன்னில் தன்னுடைய சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இரண்டாவது முறை இவர் அவுட்டானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணி வெற்றி பெறவும் சேவாக் சதமடிக்கவும் ஒரு டன் மட்டுமே தேவை. அப்பொழுது இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவ் நோபால் வீசுவார். சேவாக் அந்த பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணி வெற்றி பெறும் இருப்பினும் நோபால் என்கிற அடிப்படையில் சேவாக் ஆட்டம் 99*ரன்களில் முடிந்தது.

அலெக்ஸ் ஹேல்ஸ் – இரண்டு முறை

2012 இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இவர் ஒரு ரன்னில் தன்னுடைய சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் 2016இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் ஒரு ரன்னில் இவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.