இந்திய கிரிக்கெட்

இன்னைக்கு இந்திய ரசிகர்களை சைலண்ட் ஆக்கணும்.. உலக கோப்பையை தூக்கணும் – தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேட்டி

இன்று பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ரசிகர்களை சைலன்ட் ஆக வேண்டும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வோர்ட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நபி மும்பை மைதானத்தில் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால், இனிய சாம்பியன் உருவாவது உறுதியாகி இருக்கிறது.

இந்தியா வலுவான அணி

இந்த போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் பேசும்பொழுது “லீக் போட்டிகளில் இருந்து நாக்அவுட் போட்டிகள் மிகவும் வித்தியாசமானவை. இப்படியான போட்டிகளில் சில வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு ஜெமிமா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விதிவிலக்கான ஒரு ஆட்டத்தை ஆடினார்”

“இந்திய அணிக்கு எதிரான எங்களது குழு ஆட்டத்தைப் பற்றி நாங்கள் இன்னும் எதுவும் பேசவில்லை. இந்தியா ஒரு வலுவான அணியாக இருப்பதாலும் மேலும் அவர்கள் அதிக தன் நம்பிக்கையுடன் இருப்பதாலும், நாங்கள் மிக நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது மட்டும் எங்களுக்கு நன்றாக தெரியும்”

- Advertisement -

சைலன்ட் செய்ய வேண்டும்

“இந்திய அணிக்கு ஆதரவாக மைதானத்தில் மொத்த கூட்டமும் இருக்கும். எனவே இது எங்களுக்கு மிகவும் கடினமான ஒரு ஆட்டமாக இருக்கும். இது எல்லா டிக்கெட்டுகளும் பெற்று தீர்ந்து விட்ட ஒரு போட்டி. எனவே மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு வகையில் அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நாங்கள் சிறப்பாக விளையாடி இந்த கூட்டத்தை சைலண்ட் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : 1983 உகோ ஜெயிச்ச எங்க கூட.. இந்திய பெண்கள் டீமை ஒப்பிடாதிங்க.. அதுக்கு காரணம் இதுதான் – கபில் தேவ் பேட்டி

“எங்களால் முடிந்தவரை நாங்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நிறைய சத்தம் இருக்கும், நிறைய விஷயங்கள் நடக்கும். ஆனால் நாளின் முடிவில் இது ஒரு கிரிக்கெட் போட்டி மட்டுமே. நீண்ட நேரம் மன உறுதியை பேணுகின்ற அணி இந்த போட்டியில் வெற்றி பெறும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts