குல்தீப் யாதவின் கம்பேக்கிற்கு இந்த 2 இந்திய வீரர்கள் தான் முக்கிய காரணம் – குல்தீப் யாதவின் இளம் வயது பயிற்சியாளர்

0
107
Kuldeep Yadav DC

2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின்னர் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் அவ்வளவாக இடம்பெறவில்லை. குறிப்பாக குல்தீப் யாதவ் ஃபிட்னஸ் காரணம் கருதி நிறைய முறை அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர் குல்தீப் யாதவுக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மீண்டும் இந்திய அணியில் வந்து அவ்வளவு பெரிய தாக்கத்தை அவர் தன்னுடைய பந்துவீச்சில் ஏற்படுத்தவில்லை என்றாலும், இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து குல்தீப் யாதவை நம்பி வாய்ப்பளித்தது.

- Advertisement -

இந்த ஆண்டு நடந்த முடிந்த மெகா ஏலத்தில் குல்தீப் யாதவை யாரும் வாங்க முன்வரவில்லை. பின்னர் டெல்லி அணி நிர்வாகம் அவரை அடிப்படை தொகைக்கு கைப்பற்றியது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அவர் தற்போது உள்ளது குறிப்பிடதக்கது.

குல்தீப் யாதவின் கம்பேக்குக்கு ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் தான் காரணம்

இன்று குல்தீப் யாதவ் முன்பு தான் காண்பித்த தாக்கத்தை தன்னுடைய பந்துவீச்சில் காண்பித்து வருகிறார் என்றால் அதற்கு முழு காரணமும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் மற்றும் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் என்று குல்தீப் யாதவின் இளம்வயது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

சாதாரண சூழ்நிலையில் குல்தீப் யாதவ் இருந்தபோது அவருக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறி அவர் மீது அதீத நம்பிக்கையை ரோஹித் வைத்திருந்தார். அதேபோல டெல்லி அணியில் தற்போது ரிஷப் பண்ட் மிக அருமையாக குல்தீப் யாதவை வழிநடத்தி வருகிறார்.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் வீரர் மோசமான பார்மில் இருக்கும் போது அவரை முறையாக கையாள வேண்டும். அவருக்கு நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கூறி மீண்டும் அவரது திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும். அதை ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். குல்தீப் யாதவ் இன்று மிக சிறப்பாக விளையாடுவதற்கு இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் கூறியுள்ளார்.