குல்தீப் சிராஜ் அபார பந்துவீச்சு ; இலங்கையை பொட்டலம் கட்டியது இந்தியா!

0
1400

இந்திய மற்றும் இலங்கை அணி களுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது

இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசாங்கா மற்றும் மதுசங்கா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை . இவர்களுக்கு பதிலாக அறிமுகவீரர் நொவெண்டோ பெர்னாண்டோ மற்றும் லகிற்குமாரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர் .

துவக்கத்தில் அதிரடியாக தொடங்கிய இலங்கை அணியின் ஆட்டம் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் தடைப்பட்டது . குஷால் மெண்டிஸ் மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர் . தனது ஆரம்ப போட்டியிலேயே அருமையாக ஆடிய நொவெண்டோ பெர்னாண்டோ அரை சதம் அடித்தார. 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் . குஷால் மெண்டிஸ் மெண்டிஸ் 34 ரன்கள் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் எல்பிடபிளியு வாங்கி வெளியேறினார் . சென்ற போட்டியில் அபாரமாக ஆடிய கேப்டன் சனக்கா இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார் .

வேறு எந்த இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்ற ஆடாத நிலையில் இலங்கை அணி 215 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் இரண்டு விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் . இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .