கிரிக்கெட்

குருனால் பாண்டியா டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது – தகாத வார்த்தைகளில் டூவிட்

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி முடித்துவிட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடருக்கு முந்தைய தொடரில் இந்திய அணியின் வழக்கமான கேப்டன் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்த நிலையில் லோகத்துக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுல் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக இருந்தார். ராகுல் கேப்டனாக இருப்பினும் பலருக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ரோகித் களமிறங்க உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்காக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் க்ரூணல் பாண்டியாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளால் அந்த டுவிட்டர் பக்கத்தில் ட்வீட்டுகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் செய்தவர் தனக்கு பிட்காயின் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார். இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 130 ரன்களும் டி20 கிரிக்கெட்டில் 124 ரன்கள் எடுத்தவர் க்ரூணல் பாண்டியா. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டுகளும் டி20 கிரிக்கெட்டில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்துள்ளார். 1,143 ரன்களும் 56 விக்கெட்டுக்களை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 118 ரன்களும் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் பண்டியா.

இந்நிலையில் இவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதால் யாரும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார் க்ரூணல் பாண்டியா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் இதைக் கூறியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரின் சொந்த டிவிட்டர் பக்கம் என்பதால் ட்விட்டர் நிர்வாகம் விரைவில் இதில் தலையிட்டு இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாண்டியாவை இந்த முறை மும்பை அணி தக்கவைக்காமல் விடுவித்துள்ளதால் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார். அவரின் ஆல்ரவுண்டர் திறமைக்காக பல அணியில் இவருக்காக போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

Published by