இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இல்லை.. அந்த பையன் பேட்டிங்கை பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கிட்டாங்க.. கிரிஸ் ஸ்ரீகாந்த் வியப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மூன்றாவது போட்டி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

கடந்த இரண்டு போட்டிகள் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று சரிசமமாக இருந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகள் சரிவில் இருந்த நிலையில் விராட் கோலி மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஜோடி ஓரளவு அணியை காப்பாற்றியது.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஹர்ஷித்ராணா விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்து போட்டியை மாற்றக்கூடிய விதத்தில் அதிரடியாக ஆடினார். 43 பந்துகளை அவர் எதிர்கொண்ட நிலையில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 52 ரன்கள் குவித்து முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு விராட் கோலியும் 124 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொடரை இழந்தது.

- Advertisement -

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும்போது “விராட் கோலி தான் எப்போதும் ராஜாக்களின் ராஜா அவரை வணங்க வேண்டும். விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்து கொண்டிருந்த சமயத்தில் நிதிஷ்குமார் ரெட்டி அதனை தடுத்து நிறுத்தி ஆட்டத்தை மாற்றினார். ஆனால் உண்மையாக ஆட்டத்தை மாற்றியவர் என்று கூற வேண்டும் என்றால் ஹர்ஷித் ரானா தான். ராணா பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்ததும் நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினர்.

ராணாவின் பேட்டிங்கை கண்டு வியந்து போனேன். அவர் வேறு ஒரு மட்டத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் சிக்ஸர்கள் சுலபமாக அடிப்பதை பார்த்து வியந்து போனேன். அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. விராட் கோலி மற்றும் ஹர்ஷித் சேர்த்த 99 ரன்களில் 52 ரன்கள் ஹர்ஷித் ராணா சேர்த்தவை. அந்த சமயத்தில் நியூசிலாந்து வீரர்கள் மற்றும் நியூசிலாந்து கேப்டனே நடுங்கினார்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by