தோனி மாதிரியே ரஜத் பட்டிதாருக்கும் நடக்கும்.. விராட் ஆர்சிபி கேப்டனா வராத காரணம் இதுதான் – ஸ்ரீகாந்த் பேச்சு

0
256
Virat

ஐபிஎல் தொடரில் பிரபல அணியான ஆர்சிபி தங்களுடைய புதிய கேப்டனாக இளம் வீரர் ரஜத் பட்டிதாரை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்புக்கு வராதது ஏன்? என்பது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

விராட் கோலி ஐபிஎல் தொடரில் மூன்று வருடங்கள் விளையாடுவார், இந்த மூன்று வருடங்களிலும் ஆர்சிபி அணிக்கு மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று நடத்துவார் என வெளியில் இருந்து பலரும் பேசி வந்தார்கள். ரசிகர்களும் இதையே நம்பி இருந்தார்கள். இந்த நிலையில் விராட் கோலி கேப்டனாக வராதது தற்பொழுது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

மத்திய பிரதேஷ் அணியின் கேப்டன்

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில் இந்த வருடம் ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு சென்று மும்பை அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் கேப்டன் ஆக அவர் சிறப்பான முறையில் மத்திய பிரதேஷ் அணியை வழிநடத்திச் சென்றிருந்தார்.

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் இதை குறிப்பிட்டு அவருடைய உள்நாட்டு கேப்டன்சியை பார்த்து முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆர்சிபி அணியின் இயக்குனர் பேசும் பொழுது விராட் கோலி ஒரு தலைவர் அவருக்கு அணியின் கேப்டன் பொறுப்பு என்பது சாதாரணமானது என்று கூறியிருந்தார். இருந்த போதிலும் விராட் கோலியின் இந்த முடிவில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையவில்லை.

- Advertisement -

கேப்டன் ஆகாத காரணம் இதுதான்

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “தற்பொழுது ரஜத் பட்டிதார் கேப்டனாக ஒரு நல்ல தேர்வு என்று நான் நினைக்கிறேன். நல்ல விஷயம் என்னவென்றால் அவர் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருக்காது. 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பைக்கு தோனியை கேப்டனாக நியமித்த பொழுது அவருக்கும் இதே மாதிரி எதிர்பார்ப்புகள் இல்லை”

“தற்பொழுது ரஜத் மீதும் வெளியில் கேப்டனாக பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவர் பெரும்பாலும் கேப்டனாக தனது சொந்த முடிவுகளை களத்தில் எடுக்கக் கூடியவராக இருப்பார். மேலும் வழி காட்டுவதற்கு களத்தில் விராட் கோலி இருப்பதால் தேவைப்படும் பொழுது அவரிடம் ஆலோசனை செய்வார்”

இதையும் படிங்க : இந்திய பிளேயர்ஸ்க்கும் அந்த ஆசை இருக்கு.. ஆனா பிசிசிஐ இதுக்கு கண்டிப்பா ஒத்துக்காது – பாக் முகமது அமீர் வேதனை

“தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்று விராட் கோலி கூறியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார் என்று தோன்றுகிறது. இதன் காரணமாகவே அவர் கேப்டன் பதவியை மறுத்து இருப்பார். ஆனால் இந்த கேப்டன் விவகாரம் எல்லாமே விராட் கோலி இடம் கலந்து ஆலோசித்த பிறகு எடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -