இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சிஎஸ்கே அணியில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்தால் வெற்றி பெற முடியும்? என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
சிஎஸ்கே அணி தங்கள் சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வென்றது. பிறகு இதே மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அசாம் கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்து தோல்வி அடைந்தது.
சிஎஸ்கே அணிக்கு இந்த முறை வீரர்களை வாங்கியதில் பெரிய அளவில் தவறு நடந்து இருக்கிறது. மாறி இருக்கும் டி20 கிரிக்கெட் அணுகுமுறைக்கு ஏற்றவாறு அணி தேர்வு செய்யப்படவில்லை. இந்த அணியால் ஒருமுறை கூட 200 ரன் எடுக்க முடியாது என ரசிகர்கள் கருதுகிறார்கள். அதே சமயத்தில் மற்ற அணிகள் சாதாரணமாக 200 ரன்கள் எடுக்கிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் தோனி உடல் தகுதி இல்லாமல் சிஎஸ்கே அணியில் தொடர்வதற்கு சொந்த அணிகளின் ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திடீரென சிஎஸ்கே அணியை சுற்றிலும் நிறைய எதிர்மறையான கருத்துக்கள் பரவ ஆரம்பித்துவிட்டது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அவர்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” இந்த சிஎஸ்கே பிளேயிங் லெவனில் ஜேமி ஓவர்டன் இடத்தில் கான்வே வரவேண்டும். மேலும் ராகுல் திரிபாதிக்கு பதிலாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் வரவேண்டும். மேலும் அஸ்வினை நீக்க வேண்டாம். ஆனால் அவர் பவர் பிளேவில் பந்து வீச வேண்டாம். 7 முதல் 18 ஓவர் வரை சிறப்பானவராக இருப்பார். இவருடன் ஜடேஜா மற்றும் நூர் அகமது 10 ஓவர்கள் வரை பேச முடியும். நானாக இருந்தால் இந்த மாற்றங்களை கட்டாயம் செய்வேன்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பஞ்சாப் அணியில் இந்த மாற்றத்தை செய்யனும்.. பொறுப்பை உணர்ந்து மேக்ஸ்வெல் ஆடனும்.. ஆகாஷ் சோப்ரா
“அதே சமயத்தில் நான் சிவம் துபேவை 11-இல் விளையாட வைப்பேன். ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வருவேன். முகேஷ் சவுத்ரி கூட ஒரு நல்ல விருப்பமாக இருப்பார். அவர் கடந்த காலத்தில் சிஎஸ்கே அணிக்காக நல்ல முறையில் பந்து வீசி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.