ஐபிஎல் 2024

சிஎஸ்கேவுக்கு ஆர்சிபி பண்ணினதுக்கு.. அஸ்வின் பதிலடி கொடுத்தார்.. வாய மூடிட்டு இருங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மீண்டு வந்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றது இந்த பலராலும் நினைவு வைத்துக் கொள்ளப்படும். அதேபோல ஆர்சிபி சிஎஸ்கே அணியை வென்று அதிகப்படியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் நினைவில் இருக்கும். தற்பொழுது இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணி மீது கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் தங்களின் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் மோதிக்கொண்டன. பரபரப்பான இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற அவர்களின் கொண்டாட்டங்கள் மைதானத்தில் அளவு கடந்து இருந்தது. ஒரு கட்டத்தில் கைகுலுக்க காத்திருந்த தோனி மைதானத்தை விட்டு வெளியேறி விட்டார்.

இன்னொரு பக்கத்தில் மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் விரும்பத்தகாத வகையில் சிஎஸ்கே அணி ரசிகர்களிடம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். மேலும் சிலர் இதையெல்லாம் தாண்டி மோசமான சில விஷயங்களிலும் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் கூறும் பொழுது “போட்டிக்கு பின் தேவையற்ற வீடியோக்களை வெளியிட்டு அதிகமாக காட்டிக் கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறும்போது வாயை மூடிக் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் வேலையில் சத்தம் போடும் பொழுது அந்த வேலையை உங்களால் சரியாக செய்ய முடியாது.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஆர்சிபி அணியினர் தேவையில்லாத வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஓவராக நடந்து கொண்டார்கள். இதன் காரணமாகத்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் வந்து அவர்களை அழித்தார். அதனால் கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் இந்திய அணி எதுவும் செய்யாது.. ஏமாறத்தான் போறாங்க – டேவிட் லாயிட் கணிப்பு

நீங்கள் நன்றாக விளையாடு இருந்தாலும் மோசமாக விளையாடியிருந்தாலும் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வாயைத் திறந்து ஓவராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஆர்சிபி அணியினர் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால், சிஎஸ்கே அணி வென்றதால் தங்களை தாங்களே வாழ்த்திக் கொள்கிறார்கள். இதுபோல சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பலமுறை பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்கின்றன. மேலும் அங்கிருந்து கோப்பைகளையும் வென்று இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தகுதி பெற்று உடனே தோற்று விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்

Published by