வேற டீம்ல இருந்தாலும் அவர் மனசு இங்கதான் இருக்கு.. இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும் – கேகேஆர் சுனில் நரேன்

0
125

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான சுனில் நரேன் தங்கள் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேகேஆர் அணியின் ஸ்டார் வீரர்

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆனால் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனையே அவர்கள் தக்க வைக்காமல் வெளியே விட பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்து தங்கள் அணிக்கு எடுத்து அவரைக் கேப்டனாக நியமித்தது. இதனால் புதிய கேப்டனாக கொல்கத்தா அணிக்கு தற்போது அனுபவ வீரர் ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய ஆலோசகர் கௌதம் கம்பீர், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணி இதுவரை வென்ற மூன்று ஐபிஎல் பட்டங்களிலும் கௌதம் கம்பீர் இரண்டு முறை கேப்டன் ஆகவும் ஒரு முறை ஆலோசகராகவும் செயல்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து ஆல்ரவுண்டர் சுனில் நரேன் கௌதம் கம்பீரை தங்கள் அணி அதிக அளவு மிஸ் செய்வதாகவும், ஆனால் அவரின் ஆன்மா தங்கள் அணியுடனே இருக்கும் எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் மனது எங்களுடனே இருக்கும்

இதுகுறித்து அவr விரிவாக கூறும்போது ” தெளிவாக கௌதம் கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் தனது சொந்த வழியை கொண்டிருக்கிறார். ஐபிஎல் இல் அவர் வெற்றிகரமாக இருந்திருக்கிறார். எனவே அவர் இல்லாதது பெரிய இழப்புதான், ஆனால் அவர் ஆன்மா எங்கள் உடனே இருக்கும். அவர் எங்கள் அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார். ரகானே மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவருக்கு இப்போது ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆனாலும் அவரைச் சுற்றி பல மூத்த வீரர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:எனக்கு 18 பந்து போதும்.. ரிக்கி பாண்டிங் என்னை பவுலிங்லயும் அதை செய்ய வைக்க போறார் – ஷஷான்க் சிங் பேட்டி

நீங்கள் எப்படி தொடங்குவீர்கள் என்று கேட்டால், முதல் ஆட்டத்திலிருந்து ஐபிஎல் தொடரில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். எனவே முதல் ஆட்டத்திலிருந்து வெற்றி பெறுவது தான் இதில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும். வெற்றி பெற்ற பிறகு நாங்கள் ஒரு வருடம் போராடினோம். சில நேரங்களில் வாழ்க்கை என்பது அப்படித்தான் இருக்கும். எனவே இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” என நரேன் கூறியிருக்கிறார்.

- Advertisement -