ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
கேகேஆர் ராஜஸ்தான் மோதல்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்த சூழ்நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரென் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கிய நிலையில் சுனில் நரேன் 11 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் ரகானே மற்றும் குர்பாஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். இதில் குர்பாஸ் 35 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, கேப்டன் ரகானே 24 பந்துகளில் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு ரசல் மற்றும் அன்கிரிஸ் ரகுவன்சி ஜோடி அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் ரன் வேகத்தை உயர்த்தியது. 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் ரகுவன்சி 44 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளை எதிர் கொண்டு 57 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடங்கும். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
1 ரன்னில் திரில் வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கிய நிலையில் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் 21 பந்துகளை எதிர் கொண்டு 34 ரன்னில் ஆட்டம் இழக்க, குணால் சிங் ரத்தூர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதில் ரியான் பராக் ஒரு முனையில் போராட, துருவ் ஜுரேல் மற்றும் ஹசரங்கா இருவரும் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். இதில் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 6 போர் மற்றும் 8 சிக்ஸ் என 95 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:பிரெவிஸ் அவுட்டில் ஜடேஜா இதை உடனே செஞ்சிருக்கணும்.. தப்பு அவர் மேலயும் இருக்கு.. இந்திய முன்னாள் வீரர்
இதில் மொயின் அலியின் 13 வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். அதற்குப் பிறகு ஹெட் மயர் 29 ரன்னில் ஆட்டம் இழக்க, இறுதிக்கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது. இதில் கடைசி ஓரை வைபவ் அரோரா வீச, அதனை எதிர்கொண்ட சுபம் தூபே 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என அடிக்க கடைசி பந்தில் ஒரு பந்துக்கு 2 ரன் தேவைப்பட்டது. இதில் ஆரோராவின் துல்லியமான யார்க்கறால் கேகேஆர் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.






