“கோலிகிட்ட பவுலரோட குணம் இருக்கு.. அவர் விக்கெட்ட எடுப்பேன்” – 17 வயது தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சு ஸ்டார் பேட்டி

0
64
Maphaka

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் க்வானா மாபாகா என்ற 17 வயது தென் ஆப்பிரிக்க இளம் வேகப்பந்துவீச்சாளர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை 38 ரன்களுக்கு வீழ்த்தி, தென் ஆப்பிரிக்காவை வெல்ல வைத்தார்.

மேலும் போட்டியை வென்றதுக்கு பிறகு ஐசிசி வெப்சைட்டில் பேசிய அவர் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர் ஆனால் அவரை விட நான் சிறந்த பந்துவீச்சாளராக வர முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இது நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பேசுப் lபொருளாக மாறி இருந்தது. பலர் இந்த இளைஞரின் தன்னம்பிக்கையை பாராட்டி பேசி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசி உள்ள இந்த இளைஞர் கூறும் பொழுது ” அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், நான் எல்லா காலத்திலும் சிறந்த ஒருவரான அவருடைய விக்கெட்டை எடுக்க விரும்புகிறேன்.

அவர் ஆட்டத்தில் கொண்டுவரும் தீவிரம் நம்ப முடியாதது. அதேபோல்தான் அவர் இத்தனை ஆண்டுகளாக நிலைத்தன்மையாக ரன்கள் குவித்து வருவதும் இருக்கிறது. மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளரின் ஆன்மா விராட் கோலி இடமும் இருக்கிறது. அவர் அப்படியான ஆக்ரோஷம் கொண்டவர்.

நான் டேல் ஸ்டெயினை பின்பற்ற முயற்சி செய்துள்ளேன். அவர் தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் மிக அபாரமான ஒரு வீரர். பின் நாட்களில் நான் என்னுடைய இயல்பில், அவருடைய ஆக்ரோஷத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, நான் ஒரு தனி பிராண்ட் கிரிக்கெட் விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.