நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் செயல்பாட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது, அதே வேளையில் மிகவும் தைரியமாகவும் இருந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என இரண்டு துறையிலும் இந்திய அணி வீரர்கள் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.
பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான அணியை 43 ஓவர்களுக்கு முன்பாக 191 ரன்களுக்கு சுருட்டினார்கள்.
மேற்கொண்டு இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். மறுமுனையில் அதிரடியாக ஆரம்பித்த கில் நான்கு பவுண்டரிகள் உடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து நின்று விளையாடிய ரோகித் சர்மா 36 பந்துகளில் அரை சதம் அடித்து, 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டு ஆட்டம் இழந்தார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்தார்கள்.
நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தால், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் என்கின்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருப்பார்.
இருந்தாலும் நேற்று கேப்டனாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவராக விராட் கோலி இருந்த சாதனையை முறியடித்து ரோகித் சர்மா தன் பெயரை பதித்திருக்கிறார்..
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் :
ரோகித் சர்மா 86 ரன்கள் அகமதாபாத் 2003.
விராட் கோலி 77 ரன்கள் மான்செஸ்டர் 2019.
முகமது அசாருதீன் 59 ரன்கள் மான்செஸ்டர் 1999.
முகமது அசாருதீன் 42 ரன்கள் சிட்னி 1992.
முகமது அசாருதீன் 27 ரன்கள் பெங்களூரு 1996.






