“கோலி இந்த பையனுக்கு வாய்ப்பு தருவாரு.. ஆனா இன்னொரு பையனை வெளியே அனுப்பிடுவாரு!” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
1083
Virat

இந்திய கிரிக்கெட் எந்த அளவிற்கு தற்பொழுது செழிப்பாக இருக்கிறது என்றால், ருத்ராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா மாதிரியான வீரர்களுக்கு இந்திய அணியில் இன்னும் இடம் உறுதியாகவில்லை என்கின்ற அளவுக்கு இருக்கிறது.

இந்த மூன்று வீரர்களுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை இதுவரையிலும் டி20 கிரிக்கெட்டில் காட்டி இருக்கிறார்கள். பொதுவாக இவர்களது பேட்டிங் திறமை என்பது அபாரமான ஒன்றாக இருக்கிறது. பல முன்னாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

- Advertisement -

ஆனாலும் கூட இப்பொழுது வரை இந்திய டி20 அணியில் இளம் வீரர்களுக்கான இடம் உறுதி செய்யப்படவில்லை. காரணம் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில் மூவரும் இந்திய டி20 அணிக்கு திரும்பினால், நிச்சயம் மூன்று இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள்.

தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விக்கெட் கீப்பராக முதல் மூன்று போட்டிகளில் இசான் கிஷான் வாய்ப்பு பெற்று இரண்டு அரை சதங்கள் அடித்தார்.

இதற்கு அடுத்து நான்காவது போட்டியில் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மா இடம்பெற்றார். இதில் இஷான் கிஷான் மூன்றாவது வீரராக விளையாடினார். ஜிதேஷ் சர்மா ஆறாவது வீரராக விளையாடக்கூடியவர்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஜிதேஷ் சர்மாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. இஷான் கிஷான் ஒரு மேட்ச் வின்னர். அவர் இரண்டு அரை சதங்கள் அடித்தார். இருந்தாலும் விராட் கோலி திரும்பி மூன்றாவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வந்தால் இவர் தன்னுடைய இடத்தை இழப்பார்.

அதே சமயத்தில் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய ஜித்தேஷ் சர்மாவுக்கு விராட் கோலி வந்தால் விளையாட வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜுக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானது.

இவர்கள் சிறப்பாக விளையாடினால் ரோகித் சர்மா, விராட் கோலி, கில் மூன்று பேரும் திரும்ப வந்தாலும் இந்தியத் தேர்வாளர்கள் இந்த இளம் வீரர்களை மறக்க மாட்டார்கள். அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு இதனால் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!