“கோலி கிளாசன் இதே வேலையாவா இருக்காங்க?.. தப்பு உங்க மேலதான்!” – இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சித்த நாசர் ஹுசைன்!

0
1295
Buttler

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து லீக் சுற்றோடு வெளியேற இருக்கிறது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இப்படி யாராவது பொதுவாக கூறியிருந்தால் கூட, அதை ஆதரிக்க கூடிய ஆட்கள் பெரிய அளவில் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அப்படித்தான் நடந்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு காரணம் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை வழிநடத்தும் விதம்தான் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

அதாவது அவர்கள் தட்டையான ஆடுகளங்களில் அதிரடியான அணுகுமுறையை கொண்டு விளையாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களை இப்படி உருவாக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

- Advertisement -

தற்போது இப்படியான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அணுகுமுறை தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் பேசும்பொழுது “எனக்கு பிடிக்காத ஒரு விஷயம், ஏதாவது சொல்லி வீரர்களைக் காப்பாற்றுவது. சில சமயங்களில் எங்களுடைய கிரிக்கெட்டில் இதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று நினைக்கிறேன். இவர்கள் இதே இங்கிலாந்து கிரிக்கெட் கட்டமைப்பில் இருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 உலக கோப்பையை வெல்லும் பொழுது சிறந்தஅணியாக இல்லையா? இப்படி தோல்விகள் வந்தால் மட்டும் கிரிக்கெட் கட்டமைப்புதான் காரணமா? இது சரியான போக்கு கிடையாது.

நாங்கள் இருவது ஓவர் கிரிக்கெட் மற்றும் 100 பந்து கிரிக்கெட் விளையாடுகிறோம். சரியான அளவு ஒருநாள் கிரிக்கெட் விளையாடவில்லை. சரி விராட் கோலி மற்றும் ஹென்றி கிளாசன் போன்றவர்கள் 50 ஓவர் வடிவத்தில் உள்நாட்டில் எத்தனை போட்டிகளில் விளையாடினார்கள்? அவர்கள் டி20 பிரான்சிசைஸ் கிரிக்கெட்டில்தான் கற்றுக் கொள்கிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு நல்ல அணியை உருவாக்கியது இதுதான். உலகெங்கும் போய் டி20 கிரிக்கெட் விளையாடுவதுதான் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறது.

இந்த நேரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டமைப்பை குறை கூறுவது வீரர்களை காப்பாற்றுவது போல ஆகிவிடும். இந்த இங்கிலாந்து கிரிக்கெட் கட்டமைப்புதான் இவர்களை சிறந்தவர்களாக இதற்கு முன்பு உருவாக்கியது. இப்பொழுதும் அதே அமைப்புதான் இருக்கிறது.

இவர்கள் விளையாடும் பொழுது பந்தில் இருந்து கண்ணை எடுத்து இருக்கலாம். மேலும் இந்த போட்டிக்கு இவர்கள் தயாராகும் விதத்தில், வடிவத்தில் இவர்களுக்கு சரியான பயிற்சி போட்டிகளை வழங்காமல் போய் இருக்கலாம். ஆனால் இவர்களை உருவாக்கியது இந்த அமைப்புதான்!” என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்!

- Advertisement -