“கோலிய இப்ப பார்த்த மாதிரி எப்பவும் பாக்கல.. இதுதான் ரன் அடிக்க காரணம்!” – ரவி சாஸ்திரி சுவாரசியமான பேச்சு!

0
383
Virat

கிரிக்கெட் உலகில் சச்சின் படைத்துள்ள பெரிய சாதனைகளில் அவர் சதங்களில் அவர் படைத்துள்ள சாதனை பெரியவை. ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் என மொத்தம் 100 சதங்கள் அடித்திருக்கிறார்.

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்த 49 சதங்களை தாண்டி விராட் கோலி 50 சதங்கள் அடித்து புது உலகச் சாதனையைப் படைத்து பிரமிக்க வைத்தார்.

- Advertisement -

விராட் கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் 80 சர்வதேச சதங்கள் அடித்திருக்கிறார்.

மேற்கொண்டு விராட் கோலியின் 21 அடித்தால் ஒட்டுமொத்தமாக 100 சதங்கள் அடித்து இருக்கின்ற சச்சினின் மெகா சாதனையை விராட் கோலி முறியடிப்பார். எப்படியும் இன்னும் நான்கு வருடங்கள் விராட் கோலி விளையாடுவார் என்று நம்பலாம்.

இந்த நிலையில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது அவருடன் இணைந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்து நேற்றைய சாதனைக்கு பிறகு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சச்சின் 100 சதங்கள் அடித்த பொழுது அதை யாரும் நெருங்க முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. தற்பொழுது விராட் கோலி 80 சதங்கள் அடித்து இருக்கிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 50 சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது உண்மையில் ஆச்சரியமானது.

முடியாது என்று எதுவுமே கிடையாது. சிறப்பான வீரர்கள் சதங்கள் அடிக்க தொடங்கும்போது மிக வேகமாக சதங்கள் வரும். விராட் கோலியின் அடுத்த 10 இன்னிங்ஸ்கலில் ஐந்து சதங்களை பார்க்கலாம்.

மேலும் விராட் கோலி இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கிரிக்கெட் இருக்கிறது. இது மனதை கவரும் ஒரு விஷயம்.

அவர் இப்பொழுது கிரீசில் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவருக்கு தேவையான நேரத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். இதற்கு முன்பு அவர் எப்பொழுதும் இப்படி இருந்தது கிடையாது. அவரே எல்லாவற்றையும் செய்ய நினைப்பார். தற்பொழுது தான் நின்று இன்னிங்சை ஆழமாக கொண்டு செல்வதின் அவசியத்தை அவர் மிக அழகாக புரிந்து கொண்டிருக்கிறார்!” என்று கூறி இருக்கிறார்!