” மும்பைனு வந்துட்டாலே அடிப்பேன் ” – கே.எல்.ராகுல் அபார சதம் ; கெயில், வார்னர், கோஹ்லி படைத்த சாதனையை சமன் செய்துள்ள ராகுல்

0
130
KL Rahul Century

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின், டபுள் ஹெட்டர் போட்டி நாளான இன்று முதல் போட்டியில், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் ரோகித்தின் மும்பை அணியும், கே.எல். ராகுலின் லக்னோ அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்ய, லக்னோ அணிக்காக ஓபனிங் செய்ய களமிறங்கிய எல்லா வீரர்களும் கணிசமான பங்களிப்பைத் தர, ஒருமுனையில் நின்ற கேப்டன் கே.எல். ராகுல் மிகச்சிறப்பாக விளையாடி அபாரமாகச் சதமடித்தார். இது ஐ.பி,எல்-ல் கே.எல் ராகுலுக்கு மூன்றாவது சதமாகும். மும்பை அணியோடு இரண்டாவது சதமாகும்.

- Advertisement -
ஒரு அணியுடன் இரண்டு சதமடித்த வீரர்கள்

கிறிஸ் கெயில் பஞ்சாப்புக்கு எதிராக,
டேவிட் வார்னர் கொல்கத்தாவுக்கு எதிராக,
விராட் கோலி குஜராத் லயன்ஸ்க்கு எதிராக,
கே.எல்.ராகுல் மும்பைக்கு எதிராக.

ஒரு அணிக்காக முதன் முதலில் சதமடித்தவர்கள்

மெக்கல்லம் – கொல்கத்தா
மைக் ஹஸ்ஸி – சென்னை
ஜெயசூர்யா – மும்பை
ஷான் மார்ஷ் – பஞ்சாப்
டிவிலியர்ஸ் – டெக்கான் சார்ஜர்ஸ்
மணிஷ் பாண்டே- பெங்களூர்
யூசுப் பதான் – ராஜஸ்தான்
டேவிட் வார்னர் – ஹைதராபாத்
கே.எல். ராகுல் – லக்னோ

மும்பை அணிக்காக 2016ஆம் ஆண்டிலிருந்து கே.எல்.ராகுல் அடித்த ரன்கள்

23 (14), 68* (53), 24 (20), 94 (60), 71* (57), 100* (64), 17 (19), 77 (51), 60* (52)., 21 (22), 103* (60)

- Advertisement -