இந்திய கிரிக்கெட்

239/3.. இங்கிலாந்து ஏ டெஸ்ட்.. கேட்டு வாங்கி சதம் அடித்து அசத்திய கேஎல் ராகுல்.. இந்திய அணி அசத்தல்

இன்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் இந்திய ஏ அணிக்காக சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்திய ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஜெய்ஸ்வால் – கருண் நாயர் பரிதாபம்

இந்த டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் களமிறங்கினார்கள். இதில் ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். ஆனால் நடுவர் கொடுத்த அவுட் மீது அதிருப்தி அடைந்து சிறிது நேரம் காத்திருந்து விட்டு வெளியில் சென்றார். இங்கு டிஆர்எஸ் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து வந்த அபிமன்யு ஈஸ்வரன் 13 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து கேஎல்.ராகுல் உடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த கருண் நாயர் 71 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். இவருக்கும் பந்து ஸ்டெம்பை தாக்காமல் வெளியில் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருந்த போதும் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேஎல்.ராகுல் அசத்தல் சதம்

இந்த நிலையில் ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் சதம் அடித்தார். இவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரல் அரைசதம் அடித்து இருவருமே களத்தில் இருக்கிறார்கள். தற்போது இந்திய அணி 239 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல்ல இவங்களுக்கு மட்டும் அதிக சம்பளம் தராதீங்க.. அந்த பையன் வாழ்க்கையே வீணாயிடுச்சு – கவாஸ்கர் வேண்டுகோள்

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்த இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தாமாகவே கேட்டு கேஎல்.ராகுல் முன்கூட்டியே இங்கிலாந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு அதிக பயிற்சி வேண்டும் என்று வந்து தற்பொழுது சதமும் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறார்.

- Advertisement -
Published by