இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஓரளவு நன்றாக விளையாடி ஃபாலோ ஆனைத் தவிர்த்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜடேஜா குறித்து மற்றொரு சக இந்திய வீரர் கேஎல் ராகுல் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அதற்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 10 ரன்னில் வெளியேற, அதற்குப் பிறகு ஜடேஜா உடன் கேஎல் ராகுல் கை கோர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டது.
இதில் கேஎல் ராகுல் 139 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் குவித்த நிலையில் மற்றொரு வீரரான ஜடேஜா 123 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 77 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேரம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்திருக்கிறது. இன்னும் நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி தோல்வியில் இருந்து ஏறக்குறைய தப்பித்தது என்று தான் கூற வேண்டும். இந்த சூழ்நிலையில் கே.எல் ராகுல் ஜடேஜா குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இன்றைய போட்டியில் ஜடேஜா மிக அற்புதமாக விளையாடினார். மிக புத்திசாலித்தனமாக விளையாடினார். கீழ் வரிசையில் பேட்டிங்கில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதைத்தான் நாங்கள் ஜடேஜாவிடம் எதிர்பார்க்கிறோம். அதை ஜடேஜாவும் மிகப் பிரமாதமாக செய்து இருக்கிறார். அந்த நேரத்தில் ஜடேஜா உடன் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்தேன்.
இதையும் படிங்க:ஆஸி பவுலர் கால்களில் வலிமை இருக்கா?.. இந்தியா இந்த 2 விஷயத்தை செஞ்சா போதும் – ஹர்பஜன் சிங் அறிவுரை
ஏனென்றால் அந்தக் கட்டத்தில் அது மிக முக்கியமாக தேவைப்பட்டது. பின்னர் அவர் தனது பேட்டிங்கின் மூலம் சிறப்பாக செயல்பட்டு 77 ரன்கள் குவித்து இருக்கிறார். அது உண்மையில் மிகத் தேவையானதாக இருந்தது. ஏனென்றால் பாலோ ஆனை தவிர்க்க இத்தகைய பேட்டிங் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். அதை ஜடேஜா மிகச் சிறப்பாக செய்தார்” என்று கூறியிருக்கிறார்.இந்திய அணி தற்போது 252 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் நாளை கடைசி நாள் ஆட்டோ மட்டுமே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.