கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட் ஆவது ஏன்? – சுனில் கவாஸ்கர் பேட்டி!

0
368

கேஎல் ராகுல் அடிக்கடி சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பது ஏன்? என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டி சிறப்பாகவே அமைந்திருந்தது. முதல் போட்டியில் 200 ரன்களை கடந்தது. இரண்டாவது போட்டியில் 8 ஓவர்களில் 90 ரன்கள் இலக்கை கடந்தது. மூன்றாவது போட்டியில் 186 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஆனால் மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் அமையவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே காப்பாற்றுகிறார்கள். முதல் போட்டியில் கேஎல் ராகுல் 55 ரன்கள் அடித்தார். அதன் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் 10 ரன்கள் மற்றும் ஒரு ரன் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆசிய கோப்பை தொடரிலும் இவரது ஆட்டம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் இவரது பேட்டிங் சராசரிக்கும் குறைவாக இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

கேஎல் எதற்காக தனித்த விக்கெட்டை எளிதில் விக்கெட்டை விட்டுக்கொடுக்கிறார்? சொற்ப ரன்களுக்கு அவர் ஆட்டம் இழப்பது ஏன்? என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் இந்திய அணி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில்,

“கேஎல் ராகுல் இப்படி சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பதற்கு முக்கிய காரணம் இந்திய அணி நிர்வாகமும், அந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணிக்கு தேவைப்படும் ரன் ரேட் இரண்டும் ஆகும். முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆகையால் சேஸ் செய்ய வேண்டிய அழுத்தம் இல்லை. அப்போது கேஎல் ராகுல் நிதானத்துடன் விளையாடினார்.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் 8 ஓவர்களில் 90 ரன்களை சேஸ் செய்யவேண்டும். தேவைப்படும் ரன்ரேட் 10க்கும் அதிகமாக இருந்தது. ஆகையால் கேஎல் ராகுலுக்கு அதிரடியாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்து அது தவறுதலாக முடிந்ததால் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மூன்றாவது போட்டியிலும் தேவைப்படும் ரேட் 9க்கும் அதிகமாக இருந்து. அப்போதும் இதே போன்று விளையாடி ஆட்டமிருந்திருக்கிறார். இந்திய அணிக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்து வருகிறார்.

ஒரு ஓவரில் தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருக்கும் பொழுது துவக்க வீரர்கள் யாரேனும் ஒருவர் அதிரடியாக விளையாட வேண்டும். அந்த பொறுப்பை கேஎல் ராகுல் எடுத்துக்கொண்டு தனது விக்கெட்டை இழந்து வருவதை, மோசமாக விளையாடுகிறார் என்று விமர்சிக்க இயலாது.” என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -