ஷ்ரேயாஸ் ஐயரா ? சூர்யகுமார் யாதவ்வா ? முதல் டெஸ்ட்டில் களமிறங்கப் போகும் வீரர் அறிவிப்பு – நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

0
155
KL Rahul Suryakamar Yadav and Shreyas Iyer

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெற்றியுடன் முடித்துவிட்டு இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்களில் t20 கேப்டனும் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிக பணிச்சுமை காரணமாக முதல் போட்டியில் மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துவக்க வீரர்களுக்கான இடங்களை ரோகித் மற்றும் ராகுல் இணைந்து பிடித்துக்கொண்டனர். இங்கிலாந்தில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலுமே கிட்டத்தட்ட சிறப்பான துவக்கத்தை இந்த இணை கொடுத்தது.

அப்படி இருக்க டெஸ்ட் போட்டிகளில் ரோகித் துக்கு ஓய்வு வழங்கப்பட்டது கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் துவக்க வீரர்களாக செயல்படுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். மேலும் அணியில் இருக்கும் மற்றொரு துவக்க வீரரான கில் துவக்க வீரராக ஆடாமல் மிடில் ஆர்டர் வீரராக களம் இறங்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது கேஎல் ராகுல் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவலை பிசிசிஐ கொடுத்துள்ளது.

- Advertisement -

ராகுலுக்கு இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் பெங்களூருவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகடமியில் சென்று தன்னுடைய உடற் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏற்கனவே உடற் தகுதியை நிரூபித்தால் தான் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அணியில் சேர்க்க முடியும் என்று இந்திய நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறியுள்ளது. அதேபோல கே எல் ராகுலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்றால் தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.

கேஎல் ராகுல் எந்த தொடரிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மிடில் ஆடர் வீரராக விளையாடுவார் என்று பலரும் நினைத்திருந்த சுப்மன் கில் கேஎல் ராகுல் தொடரில் இருந்து வெளியேறியதால் துவக்க வீரராக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. சூரியகுமார் அணியின் சேர்க்கப்பட்டாலும் ஏற்கனவே அணியில் இருக்கும் ஸ்ரேயாஸ் தான் நான்காம் நிலை வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல காலமாக இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஸ்ரேயாஸ் இந்த முறை வாய்ப்பு கிடைத்து தன்னை நிரூபிப்பாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.