நான் பஞ்சாப் அணியில் இருந்து விலகிக் கொள்ள இதுவே காரணம் – உண்மையை வெளிப்படையாக கூறிய கே எல் ராகுல்

0
116
KL Rahul Punjab Kings

2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் மிக அற்புதமாக விளையாடி வந்தார். குறிப்பாக பஞ்சாப் அணிக்காக தன்னுடைய முதல் போட்டியிலேயே 14 பந்துகளில் அதிவேக அரைசதத்தை குவித்து அசத்தினார். கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 500 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு 659 ரன்கள், 2019ஆம் ஆண்டு 593 ரன்கள், 2020 ஆம் ஆண்டு 670 ரன்கள், 2021 ஆம் ஆண்டு 626 ரன்கள் என ஒரு பேட்ஸ்மேனாக பஞ்சாப் அணிக்கு மிக சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார். குறிப்பாக 2020 ஆம் ஆண்டு அவர் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியையும் வென்றார்.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளில் கேப்டனாகவும் அவர் பஞ்சாப் அணியை வழி நடத்தினார். இருப்பினும் அவரது தலைமையிலான பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் அவரை தக்கவைக்க பஞ்சாப் அணி முயற்சி செய்த நிலையில், அவர் அந்த சலுகையை புறக்கணித்தார்.

17 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி மூலமாக கைப்பற்றப்பட்ட கே எல் ராகுல்

மெகா ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே லக்னோ அணி நிர்வாகம் அவரை 17 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிவிட்டது. அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் புதிய கேப்டனாக நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் விளையாட இருக்கிறார்.

பஞ்சாப் அணியை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்

பஞ்சாப் அணியில் இருந்து விலகி வந்த காரணம் என்னவென்று தற்பொழுது கேஎல் ராகுல் மூலமாகவே நமக்கு கிடைத்துள்ளது. அது சம்பந்தமாக அவர் பேசுகையில் “பஞ்சாப் அணியில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் விளையாடி உள்ளேன். இந்த முடிவு எடுப்பது என்பது எனக்கு சற்று கடினமாகத்தான் இருந்தது.

- Advertisement -

பஞ்சாப் அணியை தாண்டி எனக்கு என்ன காத்திருக்கிறது என்றும் எனக்கான ஒரு புதிய பயணம் காத்திருக்கிறதா என்பதை காண விரும்பினேன். எனவேதான் அந்த முடிவு இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டது” என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி அதனுடைய முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வருகிற மார்ச் 28ம் தேதியன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.