கே.எல்.ராகுலின் அதிக சம்பளம் அவரின் ஆட்டத்தை பாதிக்காது ; அதிக அழுத்தத்தைத் தரக் கூடிய விஷயம் இது தான் – காம்பீர் கருத்து

0
154
Gambhir about KL Rahul

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்து விட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது. இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் இந்த தொடர் முதல் பதவியேற்க உள்ளதால் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஒருபக்கம் இந்த தொடருக்கு அதிக ரசிகர்கள் காத்து இருந்தாலும் மறுபக்கம் ஐபிஎல் தொடரின் தொடங்குதலுக்கு இப்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதுவும் இந்த ஆண்டு பெற்ற அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்க இருப்பதால் அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.

2 புதிய அணிகளை லக்னோ மற்றும் ஆமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியிருந்தது. அதன்படி லக்னோ அணி ராகுல், ஸ்டோனிஸ் மற்றும் பிஷ்னோய் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. அந்த அணியின் கேப்டனாக ராகுல் செயல்படுவார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அணி கேப்டன் ராகுலுக்கு 17 கோடி ரூபாயை சன்மானமாக அறிவித்துள்ளது. மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் ஆகும். இவ்வளவு பெரிய தொகை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் மற்றும் கேப்டன் கவுதம் காம்பீர் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் இவ்வளவு பெரிய தொகை நிச்சயம் அவருக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் தராது என்றும் கண்டிப்பாக நன்றாக விளையாடி ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இவருக்கு அதிக அழுத்தத்தை தரும் என்றும் கூறியுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளர்கள் இணைந்து இப்படி எந்த ஒரு அழுத்தமும் ராகுலை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

ராகுலின் தலைமை பொறுப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தபோது அந்த அணியின் உரிமையாளர் ராகுலை கேப்டனாக நியமித்ததில் எந்த ஒரு தவறான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் பேசியுள்ளார். நன்கு கலந்து பேசி தான் இந்த முடிவு எட்டப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். வரும் நாட்களில் நடக்க இருக்கும் ஏலத்தில் இந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -