இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் விளையாடும் விதம் குறித்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்திய அணியில் கேஎல் ராகுல்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் குவிக்க, அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா முன்னணி வீரர்கள் நன்றாக விளையாடினாலும் இறுதி கட்டத்தில் கேஎல் ராகுல் இன்னும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 42 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் இந்த லீக் சுற்றிலும் கேஎல் ராகுல் 6வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அணியில் தான் விளையாடும் விதம் குறித்து சில விஷயங்களை பதிவு செய்து பேசி இருக்கிறார்.
மக்கள் மறந்து விடுகின்றனர்
இதுகுறித்து கே எல் ராகுல் கூறும்போது “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தான் 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்து விளையாடுகிறேன். நான் பேட்டிங் செய்து வருவதையே மக்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிறகு, மீண்டும் ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகிறது. ஐந்து மாதங்கள் கழித்து திரும்பி வரும்போது நான் பிளேயிங் லெவன் அணியில் விளையாடுகிறேனா? அப்படி விளையாடினால் எந்த இடத்திற்கு நான் பொருந்துவேன் என கேள்விகள் எழுகிறது.
இதையும் படிங்க:4 ஐசிசி தொடர்.. உலகின் முதல் கேப்டன்.. யாருமே செய்யாத சாதனையை படைத்த ரோகித் சர்மா.. சாம்பியன்ஸ் டிராபி பைனல்
நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் விளையாடச் சொன்ன எல்லா இடங்களிலும் விளையாடி என் பங்கை சிறப்பாக செய்திருப்பதாக நான் உணர்கிறேன். ரோஹித் ஐந்து ஆண்டுகளாக கேப்டனாக இருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் நான் அதை சிறப்பாக செய்கிறேன் என்று உணர்கிறேன். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எப்போதும் என்னை ஆதரித்து எனக்கு ஆதரவளித்துள்ளார்” என்று கே எல் ராகுல் பேசியிருக்கிறார்.