இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் சதம் அடித்து ஆசிய பேட்ஸ்மேன்களில் அட்டகாசமான சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்தியா அணிக்கு மிக நெருக்கமாக 465 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 6 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
கேஎல்.ராகுலின் கிளாசிக்
இன்றைய நாளில் முதல் செசன் போது வானம் மேகமூட்டமாக இருந்த காரணத்தினால் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்களை விளையாடுவதற்கு இந்திய பேட்ஸ்மேன் களுக்கு பெரிய சிரமமாக இருந்தது. இந்த நிலையில் கேஎல்.ராகுல் அற்புதமான தற்காப்பு ஆட்டத்தை எடுத்து வந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு டிக்கெட் கிடைப்பதை தடுத்தார்.
முதல் செசனில் ரிஷப் பண்ட்டை நல்ல முறையில் கையாண்டு விளையாடி, மதிய உணவு இடைவேளையின் போது மேற்கொண்டு விக்கட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார். முதல் சீசன் முடிவில் 63 ரன்கள் மட்டுமே இந்திய அணிக்கு வந்தது. ஆனால் இரண்டாவது செசன் போது இதற்கு வட்டியும் முதலுமாக சேர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடி 253 பந்தில் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரிஷப் பண்ட் சதம் அடித்து 118 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
கேஎல்.ராகுல் சாதனை
இதற்கு முன்பாக சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் சதம் அடித்தார். மேலும் தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து 304 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. கேஎல்.ராகுல் 120 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். இத்துடன் இந்த சதத்தின் மூலம் வெளிநாடுகளில் அதிக சதம் அடித்த ஆசிரிய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் சயித் அன்வரை தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 148 வருட டெஸ்ட் வரலாற்றில் ரிஷப் பண்ட் அரிய சாதனை.. அதிரடி சதத்துடன் மாஸ் ரெக்கார்டுகள்
8- சுனில் கவாஸ்கர்
5- கேஎல்.ராகுல்
4- சயீத் அன்வர்
3 – எம்.அட்டப்பட்டு
3 – வினூ மன்கட்
3- மொஹ்சின் கான்
3- சாகிப் முகமது
3 – வீரேந்தர் சேவாக்
3- ரவி சாஸ்திரி
3- தமீம் இக்பால்






