வெஸ்ட் இண்டீஸ் டி20ஐ தொடரில் இருந்து ராகுல் & அக்ஷர் பட்டேல் விலகல் ; புதிய 2 மாற்று வீரர்களை அறிவித்துள்ள பிசிசிஐ

0
842
Axar Patel and KL Rahul

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் வருகிற 16-ஆம் தேதி முதல் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது.

டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற இருக்கும் நிலையில் டி20 அணியில் இடம்பெற்றிருந்த கேஎல் ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தற்போது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கேஎல் ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல்

நேற்று நடைபெற்று முடிந்த 3வது ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் அணியில் இடம்பெறவில்லை. மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு சிறிய தசை பிடிப்பு ஏற்பட்ட காரணத்தினால் ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

இன்னும் மூன்று நாட்களில் முதல் டி20 போட்டி நடைபெற இருப்பதால் அவரால் நிச்சயமாக டி20 தொடரில் பங்கேற்க முடியாது எனவே அவரை டி20 தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

மறுபக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன அக்ஷர் பட்டேல் முழுமையாக குணம் அடைந்து விட்டார். இருப்பினும் மீண்டுவந்து முன்புபோல போட்டியில் விளையாடுவதற்காக அவர் உடலளவில் தயாராகி கொண்டு வருகிறார். அவர் முழுவதுமாக தயாராக இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்பதால் அந்த கால அவகாசத்தை பிசிசிஐ அவரக்கு கொடுத்துள்ளது.

- Advertisement -

கேஎல் ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சென்று இறுதிகட்ட உடல் பரிசோதனைகளை முடித்து அங்கே பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். எனவே இவர்கள் இருவரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா இணைப்பு

கேஎல் ராகுலுக்கு பதிலாக ருத்துராஜ் அதேபோல அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹூடா ஆகியோர் டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்களான ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவரும் ஸ்டாண்ட் பை வீரர்களாக டி20 தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டி20 தொடருக்கான புதிய இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷால் பட்டேல், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா

ஸ்டாண்ட் பை வீரர்கள்

சாய் கிஷோர் மற்றும் ஷாருக்கான்