வைடு பந்துக்கு வைடு தரமறுத்த அம்பயர் – பதிலுக்கு பொல்லார்ட் செய்த சேட்டை

0
7897
Kieron Pollard in CPL

மேற்கிந்திய தீவுகளில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடர் நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரை போல இது மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் தொடர் ஆகும். இந்த தொடரில் ஆடும் மூன்று முக்கிய அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் அணிகளின் மூன்று உரிமையாளர்கள்ர் தான் இதற்கும் உரிமையாளர். சிக்சர்கள் பவுண்டரிகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த தொடர் நடந்தேறி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் ட்ரிபாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதின. நட்சத்திர வீரர் பொல்லார்டின் தலைமையில் விளையாடும் ட்ரிபாகோ அணி கடந்த ஆண்டு தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் முதல் மூன்று ஆட்டத்தில் தோல்வியுற்ற நிலையில் நான்காவது ஆட்டத்தை நேற்று ஆடியது. ஆரம்பத்தில் மடமடவென விக்கெட்டுகள் சரிந்தாலும் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் சீஃபர்ட் மற்றும் கேப்டன் பொல்லார்டு இணைந்து அணியை மீட்டனர். இந்த இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க ட்ரிபாகோ அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ட்ரிபாகோ அணி பேட்டிங்கின் போது 19-வது ஓவரை பாகிஸ்தான் வீரர் வகாப் ரியாஸ் வீசினார் அந்த ஓவரில் ஏற்கனவே 4 வைடுகளை வீசிய பின்பு, மற்றுமொரு மிகப்பெரிய வைடை வீசினார் வகாப். சீஃபர்ட் கீழே விழுந்து பந்தை தொட நினைத்தாலும் கூட அவரால் தொட முடியாத அளவுக்கு வைடாக இருந்தது அந்த பந்து. ஆனாலும் நடுவர் அந்த பந்து சரியான பந்து தான் என்று வைடு கொடுக்க மறுத்தார்.

இதனால் விரக்தி அடைந்த பொல்லார்ட் அம்பயரிடம் வாக்குவாதம் எதுவும் செய்யாமல் கிரீசில் இருந்து 20 யார்டுகள் தள்ளிப் போய் நின்று கொண்டார். ஷாட் மிட் விக்கெட் திசையில் 30 யார்ட் சர்க்கிள் அருகே சென்று நின்று கொண்டு அடுத்த பந்துக்கு காத்திருந்தார் பொல்லார்ட்.

159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய செயின்ட் லூசியா அணிக்கு ஆண்ட்ரே பிளெச்சர் 81 ரன்கள் குவித்தாலும் மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடாததால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -