என்னை பற்றி அகர்கர் பேசிய விதம் நல்லது தான்.. அது உதவியா தான் இருந்துச்சு – கருண் நாயர் விளக்கம்

0
164
Karun

தற்போது இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பின்போது அஜித் அகர்கர் தன்னைப் பற்றி பேசியது தனக்கு உதவியாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் கருண் நாயர் 700 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். அதில் மொத்தம் ஐந்து சதங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் தேர்வு செய்வார்களா? என்கின்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருந்தது.

- Advertisement -

அகர்கர் பேச்சால் எழுந்த சர்ச்சை

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் இணைந்து வெளியிட்டார்கள். அப்போது பேசிய அகர்கர் கருண் நாயர் பெயரை குறிப்பிடாமல் அவரைப் பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக வெளியில் மாறியது. அவ்வளவுதான் அடித்த வீரர் பற்றி பேசும்பொழுது பெயரை குறிப்பிட்டு பேச வேண்டும் என்று கூறப்பட்டது.

அப்பொழுது பேசி இருந்த அகர்கர் 700 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த ஒருவர் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது, அது மிகவும் சிறப்பான செயல்பாடு, நாங்கள் அந்த வீரரை பற்றி பேசினோம், ஆனால் தற்பொழுது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணியில் அனைவருமே 40-க்கும் மேற்பட்ட ரன் சராசரி வைத்திருப்பவர்கள், எனவே எங்களால் புதிய ஒரு வீரரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறி இருந்தார்.

- Advertisement -

எனக்கு உதவியாகத்தான் இருந்தது

இதுகுறித்து பேசி இருக்கும் கருண் நாயர் கூறும் பொழுது “அகர்கர் ஒரு தெளிவான அறிக்கையை கொடுக்கும் பொழுது பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களின் சிந்தனை என்ன என்பது குறித்து அவர் தெளிவாகச் சொன்னார் என்று நான் நினைக்கிறேன். இதனால் ஒரு வீரர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்கின்ற புரிதலுக்கு வர முடிகிறது. எனக்கு இது அடுத்த போட்டியில் குறிப்பாக ரஞ்சிப் போட்டியில் கவனம் செலுத்த உதவியது”

இதையும் படிங்க : பிசிசிஐ கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.. கம்பீருக்கு முதல் அதிரடி நடவடிக்கை.. வீரர்களுக்கு ஏமாற்றம்.. வெளியான தகவல்கள்

“நான் கடந்த 16 மற்றும் 18 மாதங்களாக ஒரே மாதிரி தான் பேட்டிங் செய்து கொண்டு வருகிறேன். எதையும் நான் இதில் மாற்றவில்லை. தொடர்ந்து நான் செய்யும் விஷயங்களை அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் செய்து கொண்டிருக்கிறேன். இது வெறும் மூன்று அல்லது நான்கு வருட உழைப்புதான். இதனால் என்னால் நிலையாக ரன்கள் எடுக்க முடிகிறது. இந்த நிலைக்கு நான் வந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -