இந்திய கிரிக்கெட்

தேவ்தத் படிக்கல் வரலாற்று சாதனை.. மும்பையை வெளியே அனுப்பி.. கர்நாடகா செமி பைனலுக்கு தகுதி – விஜய் ஹசாரே 2025

இன்று விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற ஒரு காலிறுதிப் போட்டியில் தேவ்தத் படிக்கல் வரலாற்று சாதனையுடன் கர்நாடக அணி மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் கர்நாடகா அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகிய நட்சத்திர வீரர்கள் விளையாடவில்லை.

மும்பை தடுமாற்றம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு ரகுவன்சி 57 பந்துகளில் 20 ரன், முசீர் கான் 9 பந்தில் 7 ரன், கேப்டன் சித்தேஷ் லாட் 58 பருந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அந்த அணி சிறிய இடைவெளிகளில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது.

இந்த நிலையில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய அனுபவ வீரர் சாம்ஸ் முலானி அரைசதம் அடித்து 91 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் சாய்ராஜ் பட்டேல் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். மும்பை அடி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணி தரப்பில் வித்யாதர் பட்டீல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

தேவ்தத் படிக்கல் வரலாற்று சாதனை

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய கர்நாடக அணிக்கு கேப்டன் மயங்க அகர்வால் 24 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இணைந்த தேவ்தத் படிக்கல் 81* மற்றும் கருண் நாயர் 74* ரன்கள் எடுத்தார்கள். கர்நாடக அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அப்போது மழை வந்த காரணத்தாலும் போதிய வெளிச்சம் இல்லாததாலும், கர்நாடக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் ரூல்டு அவுட்.. மாற்று வீரராக ஆச்சரியப்படுத்தும் பெயர் அறிவிப்பு.. இவருக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார்கள்?

மேலும் இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் 60 ரன் எட்டிய பொழுது, நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 700 ரன்களை எடுத்தார். மேலும் ஒட்டுமொத்த விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு முறை 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கருண் நாயர், நாராயணன் ஜெகதீசன், பிரிதிவி ஷா, மயங்க் அகர்வால் நால்வரும் ஒருமுறை 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -
Published by