இந்திய பெண்கள் அணி இன்னும் சிறப்பாக விளையாடி இன்று ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என கபில்தேவ் கூறி இருக்கிறார்.
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்தில் வைத்து அசுர பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்று சாம்பியன் ஆனது.
ஒப்பிட வேண்டாம்
இன்று இந்திய பெண்கள் அணி இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நவி மும்பை மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை கபில்தேவ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நிறைய பேர் 1983 உலகக் கோப்பை உடன் அவர்களை ஒப்பிட்டு வருகிறார்கள். இப்படி ஒப்பீடு செய்யக்கூடாது. ஏனென்றால் ஒப்பீடு சரியானது கிடையாது. இந்த பெண்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் சிறந்தவர்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாடிய விதம் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்று நான் உணர்ந்தேன்”
இதைவிட சிறப்பாக வேண்டும்
“அரை இறுதியில் கேப்டன் கிரிக்கெட் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இன்று இன்னும் அதைவிட சிறப்பாக இருக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எப்படியான கிரிக்கெட்டை விளையாட போகிறீர்கள் என்று விவாதித்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : இன்னும் 4 மாதம் மட்டுமே.. அதற்குள் அவசரப்பட்ட வில்லியம்சன் எடுத்த முடிவு.. ரசிகர்கள் சோகம்
“இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றினால் அது மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். அதற்கு அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இதுவரை விளையாடி வந்ததை விட இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






