குஜராத் அணிக்கு நேர்ந்த சோகம்.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் கேன் வில்லியம்சன்!

0
379

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், காலில் பலமாக அடிபட்டதால் கென் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.

16வது ஐபிஎல் டீசன் அகமதாபாத்தில் மிகச் சிறப்பாக துவங்கியது. துவக்க போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின.

- Advertisement -

பரபரப்பாக சென்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. ருத்துராஜ் 92 ரன்கள் விளாசினார்.

179 ரன்களை சேஸ் செய்த குஜராத் அணி 19.2 ஓவர்களில் சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த சீசனில் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டி என சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சன் காயம்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பார்மில் இருந்து வரும் கேன் வில்லியம்சன் கடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். அப்போதே அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் இவர்தான் என்று உறுதியானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் பிளேயிங் லெவனிலும் விளையாட வைக்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் அபாரமாக விளையாடி வந்தார். போட்டியின் 13வது ஓவரில் இவர் அடித்த பந்தை பௌண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் தாவிப்பிடிக்க முயற்சித்தார். அப்போது பந்தை பிடித்து உள்ளே தூக்கி போட்டவுடன் பவுண்டரிக்கு வெளியே குதித்த கேன் வில்லியம்சனுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.

எழுந்து நிற்க கூட முடியாமல் தவித்து வந்தார். இவரை கவனிக்க உள்ளே வந்த பிசியோ மருத்துவர்கள் அவரை தோள்பட்டையில் தூக்கியபடி வெளியே அழைத்துச் சென்றனர். உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்திருக்கிறது.

வில்லியம்சன் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ளார் என்கிற தகவல்களும் வெளிவருகின்றன. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்றாலும், குஜராத் டைட்டன்ஸ் தரப்பிலிருந்து சொல்லப்படும் தகவல்களின்படி வில்லியம்சன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது உறுதி என்று தெரிகிறது.