3வது டி20 போட்டியில் கேப்டன் விலகல்; புதிய கேப்டன் நியமனம்!

0
44044

மூன்றாவது டி20 போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விலகியுள்ளார். புதிய கேப்டனாக டிம் சவுதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுற்றவுடன் நேரடியாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

முன்னணி வீரர்கள் சிலருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா இத்தொடரில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து ஆனது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி கடந்த இருபதாம் தேதி பெ ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 65 ரன்கள் வித்தியாசத்தில் பட்டு தோல்வியை சந்தித்தது. இந்தியா 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றி/சமனை முடிவு செய்யும் 3வது டி20 போட்டி நேப்பியர் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கலந்துகொள்ள மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறுகையில், “கேன் வில்லியம்சன் தனது கை மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு இன்றளவும் சிகிச்சை பெற்று வருகிறார். சீரான இடைவெளியில் மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனையும் செய்து வருகிறார்.

மருத்துவர் பரிசோதனைக்காக அவர் ஏற்பாடுகள் செய்திருந்த தருணத்தில் சரியாக போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உடல்நிலை முக்கியம் என்ற காரணத்தினால் போட்டியிலிருந்து விலகி விட்டு, மருத்துவ சிகிச்சைக்கு செல்லவுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்.” என்று பயிற்சியாளர் தெரிவித்தார்.

மூன்றாவது டி20 போட்டியில் டிம் சவுதி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.