ஒரே சீசனில் காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள்; இப்போதே சச்சின், விராட் கோலி வரிசையில் இந்த பையனை சேர்க்க வேண்டாம் – கபில் தேவ் கருத்து!

0
5912

இரண்டு அல்லது மூன்று சீசன்களுக்கு பிறகு சுப்மன் கில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் வரிசையில் அவரை சேர்க்கலாம் இப்போது அவசரப்பட வேண்டும் என்று பேசியுள்ளார் கபில் தேவ்.

இந்த வருட ஐபிஎல் சீசன் இந்திய அணியின் இளம் துவக்க வீரர் சுப்மன் கில்-க்கு அபாரமாக அமைந்துள்ளது. 16 போட்டிகளில் 4 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் உட்பட 851 ரன்கள் அடித்து பல சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு வருவதற்கு முன்பும், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 1 இரட்டை சதம் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்டில் சதம் என கலக்கினார்.

விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு சுப்மன் கில் சரியான வீரராக இருப்பார் என்றும் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுப்மன் கில் ஒரு சீசன் நன்றாக ஆடியுள்ளார். அடுத்தடுத்த சீசன்களில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் இவரை சேர்க்கலாம்.

ஒரு சீசன் நன்றாக செயல்பட்டுவிட்டு அடுத்தடுத்த சீசன்களில் காணாமல் போனவர்கள் பட்டியலும் எங்கே இருக்கிறது. அவசரம் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாம்பவான் கப்பில் தேவ்.

- Advertisement -

“சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர் வந்தார்கள். அதைத்தொடர்ந்து டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சேவாக் போன்றோர் வந்தார்கள். பின்னர் விராட் கோலி வந்தார். இப்போது இவர்கள் வரிசையில் சுப்மன் கில் அத்தகைய அசாத்திய திறமைகளை கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வந்து குறைந்த காலங்களே ஆகிறது. திறமை இருந்தாலும், இன்னொரு சீசன் அதை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்து முடிவெடுக்கலாம். அதற்குள் பெரிய பட்டியலில் இவரை சேர்த்து பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அவருக்கு இளம் வயதிலேயே அழுத்தமும் கொடுக்க வேண்டாம்.”

“பந்துவீச்சாளர்களுக்கு சுப்மன் கில் டெக்னிக்கை கண்டறிய, அவரது பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிய இரண்டு அல்லது மூன்று சீசன்கள் ஆகும். அதுவரை அவரது செயல்பாட்டை கவனிக்க வேண்டும். அதன் பிறகும் இதேபோன்று அசாத்தியமான பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினால், கண்டிப்பாக வரும் காலங்களில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் பட்டியலிலும் இவரை சேர்க்கலாம்.”

“விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்றோர் பல சீசன்களில் தங்களை வெளிக்காட்டி இந்த இடத்தில் இருக்கிறார்கள். அதை மதிப்பளிக்கும் விதமாகவே குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு சீசன்கள் போகட்டும் என்கிறேன்.”

“சூரியகுமார் யாதவ் தனது முதல் ஆண்டில் எப்படிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி எந்த உயரத்திற்கு சென்றார் என்று பார்த்தோம். அதன் பிறகு தொடர்ச்சியான டக் அவுட் மூலம் சரிவை சந்தித்தார். இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரை அத்தகைய உயர்ந்த இடத்தில் வைத்து பேசுவது சரியாக இருக்கும். கில், ஏற்ற இறக்கங்களை சந்தித்து அதில் எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்”.

“யாரும் என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த இடத்தில் நான் வினோத் காம்ப்ளி எனும் கிரிக்கெட் வீரரை குறிப்பிட வேண்டும். அவர் தனது முதல் ஆண்டில் சுப்மன் கில் விளையாடியதை விட அபாரமாக விளையாடினார். அதன் பிறகு கிடைத்த பெயர், புகழ்களை முறையாக கையாளாமல் காணாமல் போனார்.

ஆகையால் சுப்மன் கில் இப்போது தனக்கு இருக்கும் பெயர் மற்றும் புகழ்களை இளம் வயதில் எப்படி கையாளுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எதிர்கால வீரராக தெரிகிறார். அனைத்தையும் சீனியர் வீரர்கள் மற்றும் பலரின் உதவிகளுடன் கையாண்டு பல சீசன்கள் சிறப்பாக செயல்படுவார் என்கிற நம்பிக்கையும் கொண்டிருக்கிறேன்.” என்றார்.