19 வயசு எங்க பையன பார்த்தா.. அந்த இந்திய வீரர் மாதிரியே இருக்காரு – ஜஸ்டின் லாங்கர் பேட்டி

0
155
Langar

இன்று இந்திய அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடுவதை பார்க்க தமக்கு ஒரு இந்திய வீரர் ஞாபகம் வருவதாக ஜஸ்டின் லாங்கர் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது வலதுகை பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் இன்று இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிகள் அறிமுகமானதுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

- Advertisement -

பாக்சிங் டே டெஸ்ட் பரபரப்பு

இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு 19 வயதான அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியான ஆட்டத்தில் இறங்கினார். பும்ரா பந்தில் அவர் சிக்ஸர் அடிக்க மைதானமே அதிர்ந்தது.

மேலும் சிறப்பாக விளையாடிய அவர் தனது அறிமுகப் போட்டியில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அவர் 65 பந்தில் 60 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இன்று அவர் இப்படியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று யாருமே நினைக்கவில்லை.

- Advertisement -

இந்த இந்திய வீரர் ஞாபகம் வருகிறார்

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது “போட்டிக்கு முன்பாகவே கான்ஸ்டாஸ் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் போட்டி குறித்து முன்பே பேசி இருந்தார். எனக்கு அவருடைய வார்த்தைகள் பிரமிப்பாக இருந்தது. ஆனால் தன்னுடைய வார்த்தைகளை தன்னுடைய செயல்களால் ஆதரித்தார். அருமையான முறையில் விளையாடினார். அவர் விளையாடுவதை பார்க்க ஷேவாக் 2003 ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்டில் 233 பந்தில் 195 ரன்கள் எடுத்த போட்டி ஞாபகம் வந்தது”

இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. இந்திய டீம் செலக்சனே பெரிய தப்பு.. இவர் ஆடக்கூடாது – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

“தன்னுடைய அறிமுக போட்டியில் கான்ஸ்டாஸ் விளையாடிய விதத்தால் உஸ்மான் கவாஜா அழுத்தம் இல்லாமல் இருந்தார். அவர் எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்ய வசதியாக இருந்தது. அவர் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் உடன் இணைந்து விளையாடியவர். தற்போது அவருக்கு வார்னர் போல கான்ஸ்டாஸ் கிடைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -