“நியாயமா மேன் ஆப் த சீரியஸ் எனக்கு தந்திருக்கக் கூடாது!” – கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
9718
Hardik pandya

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி உடன் ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்று இருக்கிறது!

இந்தப் போட்டியில் டாசில் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்னாக 234 ரன்களை பதிவு செய்தது. சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக 126 ரன்னை பதிவு செய்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் கில் ஆட்டநாயகன் விருதையும் ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதையும் பெற்றார்கள்!

தொடர் நாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்டியா பேசும் பொழுது “உண்மையை சொல்வதென்றால் தொடர் நாயகன் விருது எங்கள் அணி ஊழியர்களுக்குதான் தர வேண்டும். நான் எப்போதும் இது போன்ற விளையாட்டையே விளையாடி வருகிறேன். அதே நேரத்தில் என்ன நிலைமை? அந்த சூழ்நிலைக்கு என்ன தேவை? என்று படிக்க முயற்சிக்கிறேன். முன்கூட்டியே எந்த சிந்தனைகளும் கிடையாது. நான் எனது கேப்டன்சி மற்றும் வாழ்க்கையை ஒரே மாதிரி தான் அணுகுகிறேன். நான் என் தைரியத்தை ஆதரிப்பேன். அதிலிருந்து இறங்கி வேலை செய்வேன். அன்றைய நாளின் முடிவில் எது வந்தாலும் அது என்னுடைய சொந்த முடிவால் வரவேண்டும்!” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசும் பொழுது
” நான் ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டியில் இங்கு விளையாடிய பொழுது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுவது கடினமாக இருந்தது. இப்படியான அழுத்தமான போட்டிகளை நாங்கள் இயல்பாக விரும்புகிறோம். இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டிகளில் உதவி செய்யும்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -