“ஜூனியர் சூரியகுமார் யாதவ் நான்தான்!” – ஆசியன் கேம்ஸ் இந்திய அணியில் இடம் பிடித்த இளம் வீரர் பேட்டி!

0
4090
Sky

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் இறுதியில் ஆரம்பித்து அக்டோபர் மாதம் வரை சீனாவில் நடைபெற இருக்கிறது!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே கிரிக்கெட் விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு முறையும் இந்தியா சார்பில் கிரிக்கெட் அணிகள் அனுப்பி வைக்கப்படவில்லை. தற்பொழுது ஆண்கள் மற்றும் பெண்கள் இந்திய கிரிக்கெட் அணிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

- Advertisement -

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்தது. இந்த அணிக்கு ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இருப்பதால், அதற்கான அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற வீரர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய சீனியர் ஆண்கள் அணி:

- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்.

இந்த அணியில் விக்கெட் கீப்பராக பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சாப் அணிக்கு 150 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக்ரேட்டில் மிகவும் அதிரடியாக விளையாடி வருபவர்.

தற்பொழுது இந்திய அணியில் கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றி பேசி உள்ள இவர் ” இதுபோன்ற மதிப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொண்டு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை சந்திப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் தற்பொழுது விதர்பா அணியுடன் சீசனுக்கான முந்தைய பயிற்சி முகாமில் இருக்கிறேன். நாங்கள் பழைய சிவில் லைன்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்கிறோம்.

எனக்கு நான் அணியில் தேர்வானதை பற்றி நண்பர் ஒருவர் தெரிவிக்க வந்தார். நான் அப்பொழுது தூங்கச் சென்று விட்டேன். எனக்கு முன்பே எனது பெற்றோர்கள் தூங்க சென்று விட்டார்கள். அவர்களிடம் காலையில் இந்த விஷயத்தை கூறிய பொழுது அவர்கள் ஏற்கனவே தெரியும் என்று சொன்னார்கள்.

நான் சூரியகுமார் யாதவை கவனிக்க முயற்சி செய்கிறேன். நான் அவரைப் போல திறமைசாலி கிடையாது. ஆனால் ஆபத்து இல்லாத ஷாட்களை அவர் எப்படி விளையாடுகிறார்? களத்தை அவர் எப்படி கையாளுகிறார்? என்பது குறித்து அவர் விளையாடும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து தெரிந்து கொண்டு வருகிறேன். அவரது பேட்டிங்கில் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு திறமைகள் இருக்கின்றன. நான் எனது ஆட்டத்தை ஆராய்ந்து 360 டிகிரிக்கு மாற்ற முயற்சி செய்கிறேன்.

ஒருவரை எப்படி மேம்படுத்துவது என்று எப்பொழுதும் விவாதங்கள் இருக்கிறது. நான் கடந்த முறை இந்திய அணிக்காக உள்நாட்டில் நடந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ராகுல் டிராவிட் சாருடன் எனது ஆட்டத்தை மேம்படுத்துவது குறித்து பேசினேன். நீங்கள் இதுவரை எப்படி பேட்டிங் செய்து வருகிறீர்களோ அதை அப்படியே தொடருங்கள் என்று அவர் சொன்னார். சில பேட்டிங் பொசிஷன்களுக்கு என்னைப் போன்று விளையாடும் வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -