வெறும் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட முன்னாள் ஆர்.சி.பி வீரர் – பிக் பேஷ் லீக் தொடரில் சுவாரஸ்யம்

0
135
Josh Philippe

ஆஸ்திரேலியா நாட்டின் தற்போது பிக் பேஷ் லீக் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. மேக்ஸ்வெல், ரசல், ரஷீத் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதால் தொடர் ஆரம்பத்தில் இருந்தே இது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் சிட்னி மற்றும் மெல்போன் அணிகள் விளையாடின. மாக்ஸ்வல், பிலிப்பி, ரசல், ஜாம்பா, ஹென்றிக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

மெல்போர்ன் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஸ்டோனிஸ் மூன்று ரன்களுக்கும் ஜோ கிளார்க் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் மேக்ஸ்வெல் மற்றும் லார்கின் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. லார்கின் 23 தங்களுக்கு ஆட்ட பிறந்தாலும் அதன் பின்பு வந்த கார்ட்ரைட் தன் பங்குக்கு 23 ரன்கள் எடுத்தார். இவர்களுடன் இணைந்து சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் சதம் கடந்தார். 57 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதன் பின்பு களமிறங்கிய சிட்னி அணிக்கு ஜேம்ஸ் வின்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்பு இணை சேர்ந்த கேப்டன் ஹென்றிக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பிலிப்பி இணைந்து சிறப்பாக விளையாடினர். ஹென்றிக்ஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆகும் அதன் பின்பு வந்த சில்க் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். துவக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த பிலிப்பி 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மேக்ஸ்வெல் சதம் கடந்தாலும் ஆட்டத்தை வெல்லமுடியாத மெல்போன் அணி 3வது இடத்தில் உள்ளது. மெல்போன் அணி தோல்வியுற்று இருந்தாலும் மேக்ஸ்வெல் மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு திரும்பியுள்ளதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.