இங்கிலாந்தை வெளிய அனுப்ப.. ஸ்காட்லாந்து கூட நாங்க இப்படியும் விளையாடலாம் – ஹேசில்வுட் பேச்சு

0
387
Hazlewood

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறுவது அந்த அணியின் பரம எதிரியான ஆஸ்திரேலியவின் கைகளில் இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியை வெளியேற்ற சில வேலைகளை செய்யலாம் என ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ஸ்காட்லாந்து அணி மூன்று போட்டிகளில் ஐந்து புள்ளிகள் பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் ஒரு புள்ளி பெற்றிருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணி அடுத்த கடைசி இரண்டு போட்டிகளையும் வென்றால் ஐந்து புள்ளிகளுக்கு வர முடியும். அதே சமயத்தில் ரன் ரேட்டில் சிறப்பாக இருக்கும் ஸ்காட்லாந்து கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி அடைய வேண்டும்.

- Advertisement -

இதன் காரணமாக ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறி இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஆஸ்திரேலியாவின் கைகளில் இருக்கிறது.

இப்படியான நிலையில் இங்கிலாந்து அணி ஆபத்தான ஒரு அணியாக இருக்கின்ற காரணத்தினால், அந்த அணி முதல் சுற்று உடன் வெளியேறுவது எல்லோருக்கும் நல்லது எனவும், எனவே அந்த அணியை வெளியேற்றி விடுவது நல்லது எனவும் ஜோஸ் ஹேசில்வுட் பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த டி20 தொடரில் உங்களுக்கு எதிராக இங்கிலாந்து அணி இன்னொரு முறை விளையாட வேண்டியதும் வரலாம். மேலும் இங்கிலாந்து அணி அவர்களுடைய நாளில் மிகச் சிறப்பாக இருக்கக்கூடிய அணி. அவர்களுக்கு எதிராக நாங்கள் சில போராட்டங்களை சந்தித்திருக்கிறோம். எனவே எங்களின் நலனுக்காக அவர்களை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்ற முடிந்தால் அது எல்லோருக்கும் சுவாரசியமானதாக இருக்கும்.

இதையும் படிங்க : விராட் கோலி உடன் மோதுவது நெருப்புடன் மோதுவது போல – பாக்-கில் பிறந்த அமெரிக்க பவுலர் பேட்டி

இங்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் வெற்றியில் இருந்து நம்பிக்கையை பெறுவது ஒரு வழிமுறை. ஆனால் அதைவிட முக்கியம் இங்கிலாந்து மாதிரியான ஒரு அணியை வெளியேற்றி விடுவது ஆகும். எனவே ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை கடைசிவரை இழுத்துச் செல்வதே இங்கிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பை கடினம் ஆக்கிவிடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -