அதிக ரன்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா தன்னை முன்னேறி சென்றவுடன் ஆரஞ் கேப்பை கழற்றிய பட்லர் ; 2ஆம் பாதியில் அதை திருப்பிச் செய்த பாண்டியா

0
1301
Hardik Pandya and Jos Buttler

2020 ஐ.பி.எல் 15-வது சீசனின் 24-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் பெரிய அளவில் பனிப்பொழிவை காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

முதலில்டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். காலில் சிறிய காயத்தால் ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் இடம்பெற்றார்.

- Advertisement -

இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாய், மற்றுமொரு தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றார். மேலும் ஐ.பி.எல் ல் அறிமுக வீரராக லெப்ட் ஹேன்ட் ஸ்விங் பாஸ்ட் பவுலர் யாஷ் தயாள் இடம்பெற்றார்.

முதலில் குஜராத் அணிக்காக ஓபன் செய்ய வந்த கில்-வேட் சொற்ப ரன்களில் வெளியேற, விஜய் சங்கரும் கூடவே சென்றார், ஆனால் கேப்டன் ஹர்திக்கும் அபினவ் மனோகரும் ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறங்களிலும் சிதறடித்து, டிரெண்ட் போல்ட் அணியிலில்லாத குறையைச் சரியாய் காட்டினார்கள்.

இந்த ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்ச் தொப்பி ராஜஸ்தான் பட்லரிடம் இருந்தது. ஆனால் ஹர்திக் 52 பந்தில் 87 ரன்கள் அடிக்க, அது ஆட்டத்திலேயே அவர் வசம் போய்விட்டது. இதைக் கவனித்த பீல்டில் இருந்த பட்லர் உடனடியாய் தொப்பியைக் கழற்றி இடுப்பின் பின்பக்கமாய் சொருகிக்கொண்டார்.

- Advertisement -

ஆட்டத்தின் தீவிரத்தின் நடுவே இதுவொரு சுவாரசியமான சம்பவமாய் அமைந்தது!