கிரிக்கெட்

100-1 என்ற வலுவான நிலையில் இருந்து 128 ரன்களுக்கு சுருண்ட இலங்கை ; ஒரே ஓவரில் 3 முக்கிய விக்கெட்டுகளை அள்ளிய ஹேசல்வுட்

ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாட இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அதனை ஒட்டிய மக்கள் கிளர்ச்சியும் சமீபத்தில் நடந்திருந்தும், பாதுகாப்பு காரணங்கள் என்று தொடரை இரத்து செய்யாயல் ஆஸ்திரேலியா அணி இலங்கை வந்திருப்பது கிரிக்கெட் உலகில் ஒரு மிகப்பெரிய விசயமே. மேலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பாகிஸ்தானிற்கும் மூன்று வடிவ கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியா அணி முதலில் டி20 தொடரின் முதல் போட்டியில், ஆர்.பிரமதேசா மைதானத்தில் இலங்கை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி இலங்கை அணியின் இன்னிங்ஸை துவங்க பதும் நிஷாங்கா, தனுச குணதிலகே களமிறங்கினார். இருவரும் ஓரளவு சிறப்பான துவக்கம் தர, இலங்கை அணி 12 ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டார்க் பந்துவீச்சில் பதும் நிஷாங்கா விக்கெட்டை இழந்து 100-2 என வலிமையாகவே இருந்தது.

- Advertisement -

இதற்கடுத்து ஆட்டத்தின் பதினான்காவது ஓவரை வீசிய ஹசில்வுட் ஆட்டத்தை மொத்தமாக மாற்றி எடுத்து ஆஸ்திரேலியாவின் பக்கம் கொண்டுவந்துவிட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் குசால் மென்டிஸ், நான்காவது பந்தில் பனுக ராஜபக்சே, ஆறாவது பந்தில் கேப்டன் டஸன் சனகா ஆகியோரை வரிசையாக வெளியேற்றி, 100-5 என இலங்கையை நெருக்கடியில் தள்ளிவிட்டார்.

இதற்கடுத்து மிட்ச்செல் ஸ்டார்க்கும் தன் பங்கிற்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, இலங்கை அணி மளமளவென சரிந்து 19.3 ஓவர்களில் 128 ரன்களில் சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினா. ஜோஸ் ஹேசில்வுட் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் பவுலராக அறியப்பட்ட ஹேசில்வுட்டின் பந்துவீச்சு தற்போது டி20 போட்டிகளிலும் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது!

Published by