தற்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இவர் தான் என்னுடைய கனவு ஓபனிங் பார்ட்னர் – ஜோஸ் பட்லர் தேர்வு

0
4862
Jos Buttler

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஜோஸ் பட்லர். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 375 ரன்கள் இதுவரை குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 75 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 156.90 ஆக உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓபனிங் வீரராக களமிறங்கி அனைத்து அணிகளுக்கும் பயத்தை காண்பித்து வரும் ஜோஸ் பட்லரிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. தற்பொழுதுள்ள கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் அவருடன் இணைந்து ஓபனிங் வீரராக விளையாட எந்த கனவு வீரரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என்பதுதான் அந்த கேள்வி.

- Advertisement -
ரோஹித் ஷர்மாவை தேர்ந்தெடுத்த ஜோஸ் பட்லர்

“தன்னுடன் இணைந்து ஓபனிங் விளையாட ரோஹித் ஷர்மாவை ஜோஸ் பட்லர் தேர்வு செய்துள்ளார்”. ஜோஸ் பட்லர் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் இணைந்து ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி இருக்கின்றனர்.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் பட்லர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் சர்வதேச அளவில் ரோஹித் ஷர்மா இதுவரை 90 போட்டிகளில் ஓபனிங் வீரராக களமிறங்கி இருக்கிறார். 90 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 21 அரை சதங்கள் உட்பட மொத்தமாக 2832 ரன்கள் குவித்திருக்கிறார். T20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மாவின் ஆவெரேஜ் 33.32 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 142.10 ஆகும்.

அதேபோல ஐபிஎல் தொடரில் ஓபனிங் வீரராக 66 போட்டிகளில் விளையாடி 12 அரைச் சதங்களுடன் 1845 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மாவின் ஆவெரேஜ் 30.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.11 ஆகும்.

- Advertisement -

தற்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஜோஸ் பட்லர் இவர்கள் இருவரும் இணைந்து ஒரே அணியில் ஒன்றாக ஓபனிங் இறங்கினால், நிச்சயமாக அது எதிர் அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்துமென்பதே நிதர்சன உண்மை.