தற்போது இந்தியாவைச் சேர்ந்த உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இளம் வீரராக இருக்கின்ற வைபவ் சூர்யவன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோஸ்பட்லர் மிகவும் வியந்து பாராட்டி இருக்கிறார்.
கடந்த வாரத்தில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வைபவ் சூரிய வன்சி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடக்கம். இந்தப் போட்டியை பார்த்த ஜோஸ் பட்லர் வைபவ் சூரியவன்சியின் திறமையான பேட்டிங்கால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்.
நான் டிவியில் பார்த்தேன்
இதுகுறித்து ஜோஸ் பட்லர் பேசும்பொழுது “நான் அந்த போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் விளையாடிய சில ஷாட்டுகள் வழக்கமானவை கிடையாது. அது நான் பார்த்ததிலேயே சிறந்த ஷாட்டுகள் என்று உணர்ந்தேன். என்னுடைய கருத்து என்னவென்றால் நான் பார்த்ததிலேயே சிறந்த வீரர் வைபவ் சூரியவன்சி. ஏனென்றால் இந்த 14 வயதில் நான் உள்பட வேறு யார் இப்படி விளையாடி இருக்கிறார்கள்? மேலும் இவருக்கு வயதாக வயதாக இவர் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்? என்று நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது”
“அவர் ஐபிஎல் விளையாடாமல் இருந்தால், அவர் மேல்மட்ட கிரிக்கெட்டில் வந்து என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்? என்று கூறலாம். ஆனால் அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நிருபித்து விட்டார். அவர் ஐபிஎல் தொடரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அவர் ஏதோ அதை அடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிராக அஸ்வின் ஜடேஜா பந்துவீச்சில் சிக்சர் அடித்து விட்டு, அடுத்த பந்தை அழகாக சிங்கிள் எடுத்து மூத்த வீரர் போல விளையாடினார்”
உடைந்து போய்விட்டேன்
“தற்பொழுது இந்த சிறுவனை சுற்றி மிகவும் நல்லவர்கள் இருப்பார்கள். இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விஷயம். எனவே இவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி இவரை பார்த்துக் கொண்டால் இவர் பெரிய வீரராக வருவார்”
இதையும் படிங்க : இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ மீண்டும் கட்டுப்பாடு.. கம்பீர் கோரிக்கைக்கு மறுப்பு.. எதையும் மாற்ற முடியாது – வெளியான செய்தி
“இப்போது என்னுடைய வயது என்ன? 35 வயதை தாண்டி விட்டது. 14 வயது சிறுவன் இப்படி ஆடுவதை பார்த்தால் ஒரு பக்கம் ஊக்கமாக இருக்கிறது. இன்னொரு புறம் மனம் உடைந்து விடுகிறது. 14 வயது பிள்ளைகள் இப்படி விளையாடுகிறார்கள் என்றால் நாம் விளையாடுவதை நிறுத்தி விடலாம் இல்லையா?” என்று இறுதியாக நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.






